உலகின் மிக விலை குறைந்த ஸ்மார்ட்போன் என்று அறிமுகம் செய்யப்பட்ட ரிங்கிங் பெல்ஸ் ஃபீரிடம் 251 ஸ்மார்ட்போன் டெலிவரி வருகின்ற ஜூன் 28 முதல் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.

4 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸருடன் இணைந்த 1ஜிபி ரேம் பெற்றுள்ளது. 8ஜிபி வரையிலான இன்ட்ரனல் மெம்மரியுடன் 32 ஜிபி வரையில் கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள இயலும்.

ஃபிரீடம் 251 மொபைல் போனில் 3,2 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 0.3 மெகாபிக்ஸல் ரியர் கேமராவினை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தில் செயல்படும் மொபைல்போனில் 3ஜி தொடர்பினை பெறலாம்.

பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை பெற்ற ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் 30,000 நபர்கள் மட்டுமே பணம் செலுத்தியுள்ளனர். 7 கோடி நபர்கள் மொபைல் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது.இவர்கள் அனைவருக்கும் கேஸ் ஆன் டெலிவரி முறையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.