ஒன்பில்ஸ் 6T ஸ்மார்ட் போன்களுக்கான விற்பனை அமேசான் இந்தியா இணையதளத்தில் தொடங்கியுள்ளது. பல்வேறு அப்கிரேடுகளுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் 37,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி விலை, ஸ்கீரின் ஆன்லாக் (இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்), வாட்டர் டிராப் டிஸ்பிளேகளுடன் வாட்டர் டிராப் நாட்ச், பெரியளவிலான ஸ்கிரீன், கொரில்லா கிளாஸ் 6 மற்றும் பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட் போனில் இடம் பெற்றுள்ளது.

ரேம் அடிப்படையில் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன்கள், இந்தியாவில் 6GB ரேம் / 128GB ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒன்பிளஸ் 6T போன்கள் 37,999 ரூபாய் விலையிலும், 8GB ரேம் / 128GB ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒன்பிளஸ் 6T போன்கள் 41,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. மேலும் 8GB ரேம் / 256GB ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒன்பிளஸ் 6T போன்கள் 45,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. மேலும் இந்த போன்களுகு ஜியோ 5,400 ரூபாய் கேஷ்பேக், 2,000 ரூபாய் உடனடி டிஸ்கவுண்ட் உள்பட பல ஆப்பர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி இன்று முதல் வரும் 5ம் தேதி வரை அமேசான் பே மூலம் இந்த ஸ்மார்ட் போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1000 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.