இந்தியாவில் தாய்வான் நாட்டின் ஆசஸ் நிறுவனம் புதிதாக ரூ.9,999 விலையில் ஆசஸ் ஜென்ஃபோன் லைவ் ஸ்மார்ட்போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஜென்ஃபோன் லைவ் மொபைல் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.
ஆசஸ் ஜென்ஃபோன் லைவ்
இரட்டை சிம் ஆதரவு பெற்ற ஆசஸ் ஜென்ஃபோன் லைவ் மொபைலில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான ZenUI 3.0 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 2.5டி கர்வட் கிளாஸ் பெற்று, 2ஜிபி ரேம் உடன் இணைந்து குவாட்கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 410 எஸ்ஓசி பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
16ஜிபி அல்லது 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் இரு வகையில்கினைன்ற இந்த மொபைலில் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஆசஸ் ஜென்ஃபோன் லைவ் ஸ்மார்ட்போனில் f/2.0 அபெர்ச்சர், ஆட்டோஃபோகஸ், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமராவில் f/2.2 அபெர்ச்சர், 1.5 மைக்ரான் பிக்சல் சைஸ், சாஃப்ட் லைட் எல்இடி ஃபிளாஷ் கொண்டுள்ளது. முன்புற கேமராவில் லோ வைட், மேனுவல் மோட், நைட் மற்றும் செல்ஃபி மோட் உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது.
ஷிம்மீர் கோல்டு, ரோஸ் பிங்க், நேவி பிளாக் என மூன்றுநிறங்களை பெற்றுள்ள இந்த கருவி 2650mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. கூடுதல் விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், புளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதன் அளவுகள் 141.2×71.7×7.90mm மற்றும் 120 கிராம் எடையுடையது.
பியூட்டி லைவ்
இந்த கருவியின் மிக முக்கயமான அம்சமாக பேசப்படுகின்ற பியூட்டி லைவ் (BeautyLive) பயன்பாடு கேமரா மொபைல் நுட்பங்களில் அதிகபட்ச அம்சமாக வந்துள்ளது. உலகின் முதல் நேரலை அழகுபடுத்தும் தொழில்நுட்பத்தை சென்போன் லைவ் பெற்று விளங்குகின்றது. இந்த பியூட்டி லைவ் வழியாக சமூக வலைதள லைவ் வீடியோ சேவையை பயன்படுத்தும்பொழுது அழகுப்படுத்த உதவுகின்றது.
மிக நேர்த்தியான ஆடியோ பெறும் வகையில் MEMS மைக்ரோஃபோன்கள் உதவுகின்றது. இரைச்சல் மற்றும் இடையூறான ஒலிகளை குறைத்து, இக்கருவி தெளிவான குரல் தரத்தை வழங்க உதவுகின்றது.
அசுஸ் சென்போன் லைவ் நுட்பவிபரம்
வசதிகள் | ஆசஸ் ஜென்ஃபோன் லைவ் |
டிஸ்பிளே | 5 இன்ச் ஹெச்டி |
பிராசஸர் | குவால்காம் 410 SoC |
ரேம் | 2GB |
சேமிப்பு | 16GB/32GB- நீட்டிக்க SD கார்டு 128GB |
பின் கேமரா | 13MP |
முன் கேமரா | 5MP |
ஓஎஸ் | ஆண்ட்ராய்டு 6.0 அடிப்படை ஜென் UI |
பேட்டரி | 2,650mAh |
ஆதரவு | இருசிம், 4G VoLTE, புளூடுத், ஜிபிஎஸ், வை-ஃபை |
விலை | ரூ. 9,999 |
எங்கே வாங்கலாம்
தற்பொழுது அசுஸ் ஜென்ஃபோன் லைவ் அனைத்து ஆஃப்லைன் ரீடெயிலர்கள் மற்றும் ஃபிளிப்கார்ட் தளத்தில் ரூ.9999 ஆரம்ப விலையில் கிடைக்கின்றது.