இந்திய சந்தையில் புதிய நிறுவனமாக ஹைவ் பொபைலிட்டி (HyveMobility) என்ற பெயரில் நடுத்தர ரக மொபைல் போன்களை இந்தியாவை சேர்ந்த ஹைவ் ஸ்ட்ரோம் மற்றும் பஷ் என இரு மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.

சீன மொபைல்களே இந்திய சந்தையை ஆக்கரமித்து உள்ள நிலையில் புதிய இந்திய மொபைல் நிறுவனங்களின் வருகை நல்லதொரு தொடக்கமாக அமைந்து வருகின்றது. ஹைவ் மொபைலிட்டி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சரத் மெகரோத்ரா முன்னாள் ஆப்பிள் நிறுவன பனியாளராகும்.

ஹைவ் ஸ்ட்ரோம்

ஹைவ் மொபைலிட்டி நிறுவனத்தின் ஹைவ் ஸ்ட்ரோம் மொபைல் 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேவுடன் மீடியாடெக் MT6735 SoC யில் 1.3 Ghz பிராசஸர் பெற்று 2GB ரேமுடன் விளங்குகின்றது. இதில் 5.1 லாலிபாப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தொடங்கினாலும் விரைவில் 6.0 மார்ஷ்மெல்லா அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஸ்ட்ரோம் மொபைலில் 13 மெகாபிக்ஸல் கேமரா Phase Detection Auto-Focus (PDAF) உடன் இணைந்து சிறப்பான படங்கள் மற்றும் வீடியோவினை வழங்கும். முன்பக்கத்தில் 5 மெகாபிக்ஸல் கேமரா பெற்றுள்ளது.

4G LTE தொடர்புடன் இரு சிம் கார்டினை பெற்று ஹைபிரிட் சிம் ஸ்லாட் பெற்றிருப்பதனால் ஒரு சிம் கூடுதலாக மெம்மரிகார்டு அல்லது சிம் மட்டுமே பயன்படுத்த இயலும். உட்புற சேமிப்புதிறன் 16GB பெற்று கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 64GB வரை அதிகரிக்க இயலும். 2000mAh பேட்டரி ஒரு நாள் முழுமைக்கு வரும்.

ஹைவ் ஸ்ட்ரோம் – ரூ.8499

ஹைவ் பஷ்

ஹைவ் பஷ் மொபைல் 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேவுடன் மீடியாடெக் MT6753 SoC யில் 1.5 Ghz பிராசஸர் பெற்று 3GB ரேமுடன் விளங்குகின்றது. இதில் 5.1 லாலிபாப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தொடங்கினாலும் விரைவில் 6.0 மார்ஷ்மெல்லா அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஸ்ட்ரோம் மொபைலில் 13 மெகாபிக்ஸல் கேமரா Phase Detection Auto-Focus (PDAF) உடன் சோனி Exmor RS மற்றும் இரு எல்இடி பிளாஷ் இணைந்து சிறப்பான படங்கள் மற்றும் வீடியோவினை வழங்கும். முன்பக்கத்தில் 5 மெகாபிக்ஸல் கேமரா பெற்றுள்ளது. மேலும் முக்கிய வசதியா கைரேகை ஸ்கேனர் உள்ளது.

4G LTE தொடர்புடன் இரு சிம் கார்டினை பெற்று ஹைபிரிட் சிம் ஸ்லாட் பெற்றிருப்பதனால் ஒரு சிம் கூடுதலாக மெம்மரிகார்டு அல்லது சிம் மட்டுமே பயன்படுத்த இயலும். உட்புற சேமிப்புதிறன் 16GB பெற்று கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 128GB வரை அதிகரிக்க இயலும். மேலும் பன்டலில் வழியாக கூடுதலாக 32GB எஸ்டி கார்டு கிடைக்கும். 2500mAh பேட்டரி ஒரு நாள் முழுமைக்கு வரும்.

கருப்பு , நீளம் மற்றும் வைன் வண்ணங்களில் கிடைக்கும்


ஹைவ் பஷ் – ரூ. 13,999

நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களில் மொபைலை இலவசமாக எடுத்து சென்று சர்வீஸ் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 22 முதல் ஃபிளிப்கார்ட் ,அமேசான் மற்றும் கேட்ஜெட்360 ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்கும்.

அமேசான் தளத்தில் பார்க்க ‘ – amazon.in

ஃபிளிப் கார்ட் தளத்தில் பார்க்க ; 

ஹைவ் ஸ்ட்ரோம்ஹைவ் பஷ்
5inch HD display5.5inch FHD display with 2.5D glass on top
MediaTek MT6735 SoC clocked at 1.3 Ghz processorMediaTek MT6753 SoC clocked at 1.5Ghz processor
2 GB RAM3GB RAM
16 GB inbuilt, expandable upto 64 GB16GB inbuilt, bundled with 32GB card and also expandable upto 128GB
13Mp rear camera with 5Mp front camera13Mp rear camera with 5Mp front camera
2000mAh battery2500mAh battery
No IPX4 ratingIPX4 rating
No fingerprint scannerFingerprint scanner at the back
விலை ரூ. 8,499விலை ரூ. 13,999