ரூ.3,999 விலையில் இன்டெக்ஸ் அக்வா சென்ஸ் 5.1 மொபேல்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 இன்ச் டிஸ்பிளைவுடன் 512MB ரேம் பெற்றுள்ளது.

5 இன்ச் WVGA (480 x 854 pixels) ஐபிஎஸ் டிஸ்பிளைவில் 1.2GHz குவாட் கோர் ஸ்பீட்டரம் (SC7731) பிராசஸர் உடன் இணைந்த 512MB ரேம் பெற்றுள்ளது. மொபைல் சேமிப்புதிறன் 8GB ஆகும், மேலும் மைக்ரோஎஸ்டி கார்டு கொண்டு சேமிப்பு திறனை அதகரிக்க இயலும்.

ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தின் வாயிலாக செயல்படும் அக்வா சென்ஸ் 5.1 மொபைல்போனில் 2 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமரா பெற்றுள்ளது. 3G, GPRS/ EDGE, GPS/ A-GPS, மற்றும் Wi-Fi தொடர்புகளை பெற்றுள்ள இன்டெக்ஸ் அக்வா சென்ஸ் 5.1 மொபைலில் சாம்பேயின் , கிரே மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். 2500mAh பேட்டரி பெற்றுள்ளது.

விரைவில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இன்டெக்ஸ் அக்வா சென்ஸ் 5.1 மொபைல் விலை ரூ.3.999 ஆகும்.