ரூ.5,490 விலையில் இன்டெக்ஸ் அக்வா ஸ்ட்ராங் 5.1+ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது VoLTE ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம்  செயல்படுகின்றது.

இன்டெக்ஸ் அக்வா ஸ்ட்ராங் 5.1+ ஸ்மார்ட்போன் அறிமுகம்

 இன்டெக்ஸ் அக்வா ஸ்ட்ராங்

இன்டெக்ஸ் அக்வா ஸ்ட்ராங் 5.1+ கருவியில் 197ppi  பிக்சல் அடர்த்தியுடன் கூடிய 480×854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் GWCGA திரையை கொண்டுள்ளது.  1.3GHz குவாட் கோர் ப்ராசசர் வாயிலாக 1ஜிபி ரேம் உடன் செயல்படுகின்றது.

8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் கூடுதல் சேமிப்புக்கு மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை அதிகரிக்கலாம். அக்வா ஸ்ட்ராங் 5.1+ மொபைலில்  f/2.8 அபெர்ச்சர், எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா பெற்றுள்ளது.
2000mAh பேட்டரி திறன் கொண்டுள்ள அகுவா 5.1 மொபைலில் கூடுதல் வசதிகளாக Wi-Fi உடன் ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், HSPA, HSPA+, 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ, 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. 143.1×72.1×10.1mm நடவடிக்கைகள் மற்றும் 150.6 கிராம் எடையுடையது. இது தங்கம், கருப்பு ஆகிய வண்ண வகைகளில் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here