இந்தியாவில் மிக வேகமாக மற்றும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்ற ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சியோமி ரெட்மி 4 சில்லறை வணிகர்களின் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 4 மொபைல் விலை அதிகரிப்பு..! ஆனால் ?

சியோமி ரெட்மி 4 மொபைல் விலை

ஆன்லைன் சந்தையை மட்டுமே நம்பியிருந்த சியோமி நிறுவனத்தின் மொபைல்கள் தற்போது சில்லறை வணிகர்கள் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ. 500 வரை மூன்று வித மெமரி வாரியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அமேசான் மற்றும் தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சில்லறை வணிகர்கள் வாயிலாக சிரமமின்றி வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. மாடல்கள் வாயிலாக ரூ. 500 வரை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், எனினும் விலை ஒவ்வொரு விற்பனையாளரிடம் மாறுபடும் என சியோமி தெரிவித்துள்ளது.

சியோமி ரெட்மி 4 மொபைல் விலை அதிகரிப்பு..! ஆனால் ?

சியோமி ரெட்மி 4 நுட்பவிபரங்கள்

  • 5.0 அங்குல எச்டி டிஸ்ப்ளே
  • 1.4GHz ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
  • 2GB,3GB மற்றும் 4GB ரேம்
  • 128GB மைக்ரோஎஸ்டி கார்டு ஆப்ஷன்
  • 13MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
  •  5MP செல்ஃபி கேமரா
  • 4100mAh பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
  • 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, GPS/ A-GPS, மைக்ரோயூஎஸ்பி உடன் OTG, புளூடூத் v4.1 மற்றும் 3.5mm ஆடியோ ஜாக்

சியோமி ரெட்மி 4 மொபைல் விலை அதிகரிப்பு..! ஆனால் ?

விலை பட்டியல்

2GB RAM/ 16GB ரூ. 7,499 (6,999)

3GB RAM/ 32GB ரூ. 9,499 (8,999)

4GB RAM/ 64GB ரூ.. 11,499 (10,999)

அடைப்பிற்குள் ஆன்லைன் விற்பனை விலை இணைக்கப்பட்டுள்ளது.

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com