உலகின் மிக விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சுவிஸ் நாட்டின் சிரியன் லேப்ஸ் சோலாரின் என்ற பெயரில் £9500 (ரூ.9 லட்சம் ) மதிப்பில் விற்பனைக்கு வெளியிட்டடுள்ளது.
முதற்கட்டமாக இங்கிலாந்தில் விற்பனையை தொடங்கியுள்ள சிரியன் சோலாரின் ஸ்மார்ட்போன் விலை உயர்ந்த போன் மட்டுமல்லாமல் மிக உயர்ரக பாதுகாப்பு தன்மை கொண்ட மொபைல் ஆகும்.
சோலாரின் பாதுகாப்பு அம்சம்
மிகவும் பிரத்யேகமான பல நவீன பாதுகாப்பு முறைகளை கொண்டு மிக சிறப்பான தனிநபர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சோலாரின் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள சிப் டூ சிப் 256-bit AES என்கிரிப்ஷன் செய்யப்பட்டுள்ளதால் அழைப்புகள் , குறுஞ்செய்தி என அனைத்தும் மிக பாதுகாப்பாக இருக்கும். மிக கடுமையாக பாதுகாப்பு அம்சங்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட கூல்ஸபேன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. மேலும் பாதுகாப்புக்கான பிரைவசி ஆப்சினை உலகின் சிறந்த பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜிம்பேரியம் உருவாக்கியுள்ளது.

சோலாரின் மொபைலில் பயன்படுத்தப்பட்டுள்ள 2500க்கு மேற்பட்ட பாகங்கள் கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான உழைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது.
சோலாரின் நுட்ப விபரங்கள்
சோலாரின் மொபைல் போனில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப இயங்குதளத்துடன் கூடிய 2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் உடன் இணைந்த 4GB ரேம் பெற்றுள்ளது.
4G LTE தொடர்புடன் 450Mbps வேகத்தில் தரவிறக்கவும் 150Mbps வேகத்தில் பதிவேற்றும் செய்யும் வகையிலான 24 பேன்ட் LTE தொடர்பினை கொண்டுள்ளது.
23.8 மெகாபிக்சல் பிரைமரி கேமராவில் மிக தெளிவான படங்கள் மற்றும் வீடியோவினை பெறும் வகையில் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது. முன்பக்க கேமரா 8 மெகாபிக்சல் ஆகும்.
5.5 இன்ச் அகலம் கொண்டுள்ள ஐபிஎஸ் டிஸ்பிளேவில் 2K (1440×2560 pixels) ரெஷல்யூசன் கொண்டுள்ளது. இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 , மெட்டல் மேட்ரிக்ஸ் காம்போசிட் அடிச்சட்டத்தினை டைட்டானியம் பேனல்களை கொண்டு வழங்கியுள்ளது.
250 கிராம் எடை கொண்டுள்ள சிரியன் சோலாரின் மொபைல் போனில் 4050mAh பேட்டரியை மிக வரைவாக சார்ஜ் செய்யும் வகையில் குவால்காம் ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்றுள்ளது. இன்ட்ரனல் மெம்மரி 128GB வரை கிடைக்கின்றது. தண்ணிர் மற்றும் மாசுவினை தடுக்கும் அம்சத்துடன் விளங்குகின்றது.
பையர் பிளாக் கார்பன் டைட்டானியம் இணைந்த லெதர், ஃபையர் பிளாக் லெதர் இணைந்த டைமண்ட் நிற கார்பன் , ஃபையர் பிளாக் கார்பன் லெதர் இணைந்த மஞ்சள் நிற தங்கம் மற்றும் க்ரிஸ்டல் வைட் லெதர் இணைந்த டைமண்ட் கார்பன் கொண்ட என 4விதமான நிறங்களில் கிடைக்கின்றது .