டென்மார்க் நாட்டைச் சேர்ந்த லூமிகான் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் உலகின் முதல் நைட் விஷன் கேமரா வசதி கொண்ட லூமிகான் டி3 ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

லூமிகான் நிறுவனத்தின் முந்தைய மாடலான டி2 ஸ்மார்ட்போனில் ரிமோஃ கன்ட்ரோல் ஆப்ஷனை கொண்டிருந்தது.
தற்பொழுது வெளியாகியுள்ள லூமிகான் நிறுவன டி3 ஸ்மார்ட்மொபைல் மெரைன்-கிரேடு 316 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் வடிவமைக்கப்பட்டு   6.0 ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் 4.8 இன்ச் சூப்பர் AMOLED திரையுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் இணைந்த மீடியாடெக் X10 2.2 GHz 64-bit பிராசஸருடன் 3GB ரேம் வசதியுடன் 128GB திறனாய்வு நினைவகத்தினை பெற்று விளங்குகின்றது.

பிரைமரி கேமரா 13 மெகபிக்ஸ்ல் வசதியுடன் டியூவல் டோன் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 4K வீடியோ மற்றும் ஸ்லோ மோஷன் ரெக்கார்டிங் வசதியை பெற்றுள்ளது. முன்பக்க 5 மெகாபிக்ஸல் கேமராவில் 2K ரெக்கார்டிங் வசதியை பெற்றுள்ளது.

கூடுதலாக பின்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள 4 மெகாபிக்ஸல் நைட் கேமரா டியூவல் இன்ஃபிராரெட் ஃபிளாஷ் வசதியின் உதவியுடன்  சிறப்பான படங்கள் மற்றும் வீடியோவினை 2K தரத்தில் தரவல்லது.

மேலும் மிக பாதுகாப்பாக மொபைலை கையாளும் வகையில் லூமிகான் வாலட் ஆப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படங்கள் , தகவல்கள் , தொடர்புகள் , ஆப்ஸ் மேலும் பலவற்றை பின் வசதிகளை கொண்டு பாதுகாக்க இயலும்.

லூமிங்கடன் டி3 மொபைலில் பின்புறத்தில் டச் வசதி மற்றும் கேமரா சட்டர் சேர்க்கப்பட்டுள்ளது. கைரேகை ஸ்கேனர் பெற்றுள்ள ஸ்மார்ட்போனில் வெள்ளை , கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களுடன் கூடுலாக 24 காரட் கோல்டு எடிசனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லூமிங்கன் இணையதளத்தின் வாயிலாக விற்பனையை தொடங்கப்பட்டுள்ள நிலையில் டி3 மொபைல் தொடக்க விலை $700  (ரூ.50000) மற்றும் டாப் வேரியண்ட் $1200 நெருங்கலாம். 200க்கு மேற்பட்ட நாடுகளுக்கு லூமிங்கன் அலுவல் இணையத்தின் வாயிலாகவே டெலிவரி தொடங்கப்பட உள்ளது.