அன்றாட வாழ்க்கை தேவைகளில் அடிப்படையான வசதியாகி விட்ட ஸ்மார்ட்போன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய சிறப்பு அம்சங்கள் என்ன ? என்பதனை பற்றி எந்த மொபைல் வாங்கலாம் ? என்ற இந்த செய்தி பகிர்வில் அறிவோம்.

எந்த மொபைல் வாங்கலாம் ? ஸ்மார்ட்போன் சாய்ஸ்
அழைப்புகள் , பொழுதுபோக்கு , வீடியோ , விளையாட்டுகள் என பலவற்றை கடந்த தொழில் சார்ந்த தேவைகளுடன் உடல் நலன் பாதுகாப்பு அம்சங்கள் என பலவற்றை கொண்டு நம் கையில் சுழலும் உலகமாக ஸ்மார்ட்போன்கள் விளங்குகின்றது.

பட்ஜெட்

 • நம்முடைய தேவைக்கேற்ப நம் கையில் உள்ள பட்ஜெட் தொகையை வைத்து மொபைல் தேர்வு செய்வது மிக முக்கிய அம்சமாகும். குறிப்பாக நீங்கள் வாங்கும் மொபைல் போன் குறைந்தபட்சம் அடுத்த ஒரு வருடத்திற்க்கு பயன்படுத்தும் வகையிலான அதிக அம்சங்கள் மற்றும் பல வசதிகளை கொண்ட  புதிய தலைமுறை மொபைலாக இருக்கும் வகையில் உங்கள் பட்ஜெட்டை ரெடி பன்னுங்க.
 •  அனைத்து வகை பட்ஜெட் விலையிலும் தற்பொழுது ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்ற நிலையில் உங்கள் பட்ஜெட் மற்றும் உங்கள் மொபைல் தேவை பற்றி நீங்களே முதலில் சுயசிந்தனை செய்து கொள்ளுங்கள்.
பட்ஜெட் மற்றும் உங்கள் தேவை தெளிவாகி விட்டால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்வோம்.
எந்த மொபைல் வாங்கலாம் ? ஸ்மார்ட்போன் சாய்ஸ்

ஓஎஸ்

 • உலகயளவில் முன்னனி நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு ஓஎஸ் , ஆப்பிள் ஐஓஎஸ் , விண்டோஸ் மொபைல் , பிளாக்பெர்ரி ஓஎஸ் போன்றவை பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை ஆக்கரமித்து உள்ளது.
 • குறிப்பாக கூகுள் ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளம் உலகயளவில் 82.80 சதவீத மொபைல்களில் செயல்படுகின்றது. அதனை தொடர்ந்து ஆப்பிள் ஐஓஎஸ் 13.9 சதவீத ஸ்மார்ட்போன்களிலும் அதனை தொடர்ந்து விண்டோஸ் மொபைல் ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி போன்றவை உள்ளது.
 • திறந்த வெளி இயங்குதளமான ஆண்ட்ராய்டு எண்ணற்ற நிறுவனங்களின் முக்கிய இயங்குதளமாக செயல்பட்டு வருகின்றது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளம் ஆப்பிள் கருவிகளிலும். விண்டோஸ் மொபைல் , பிளாக்பெர்ரி போன்றவை அந்தந்த நிறுவனத்தின் கருவியில் மட்டுமே செயல்படுகின்றது.
எந்த ஓஎஸ் வாங்கலாம் என தேர்வு செய்திருந்தால் அடுத்த தலைப்புக்கு வாங்க,..
எந்த மொபைல் வாங்கலாம் ? ஸ்மார்ட்போன் சாய்ஸ்

அலைவரிசை

 • இந்தியாவின் பெரும்பாலான முன்னனி நகரங்களில் 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பல நகரங்களுக்கும் 4ஜி சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருவதனால் இந்த வருடத்தின் இறுதிக்குள் பெரும்பான்மையான நகரங்களில் ஏர்டெல் , வோடோஃபோன் , ஐடியா , ஜியோ, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் 4ஜி சேவையை தொடங்கிவிடும்.
 • எனவே உங்கள் மொபைல்போனில் 4ஜி சேவையை தேர்வுசெய்து கொள்வது மிகவும் உதவியாக இருக்கும். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 3ஜி அடிப்படை அம்சமாக இருந்து வருகின்றது.
2ஜி மறந்துட்டோமா ….அடுத்து என்ன…
எந்த மொபைல் வாங்கலாம் ? ஸ்மார்ட்போன் சாய்ஸ்

டிஸ்பிளே

 • தற்பொழுது சாதரனமாக அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் குறைந்தபட்ச டிஸ்பிளே 4.5 இன்ச் முதல் 5.7 இன்ச் வரையிலான மிக அகலமான திரை அமைப்பினை பெற்றுள்ளது.
 • ஹெச்டி டிஸ்பிளே மொபைல்களின் புழக்கம்அதிகரித்திருந்தாலும் தரமான ஃபுல் ஹெச்டி திரையினை தேர்வு செய்வது நல்லதாகும். மேலும் கொரில்லா கிளாஸ் போன்றவை இருந்தால் டிஸ்பிளே நீடித்து உழைக்கும். இல்லையென்றாலும் டேம்பர்ட் கிளாஸ் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • பட்ஜெட் மொபைல்களில் 720p , நடுத்தர விலை மொபைலில் ஃபுல் ஹெச்டி 1080p மற்றும் உயர்ரக ஸ்மார்ட்போன்களில் குவாட் ஹெச்டி டிஸ்பிளை கிடைக்கும்.
எந்த மொபைல் வாங்கலாம் ? ஸ்மார்ட்போன் சாய்ஸ்
அடுத்து நம் வாழ்க்கையின் நினைவுகளை சேமிக்க கலர்ஃபுல்லான செல்ஃபீ

கேமரா

 • ஸ்மார்ட்போன்களில் முக்கிய அம்சமாக விளங்கும் கேமரா மெகாபிக்சல்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
 • பெரும்பாலான நடுத்தர பட்ஜெட் மொபைல்களில் 8 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா பெற்றிருக்கும். சிலவற்றில் 13 மெகாபிக்ஸல் கேமராவும் பெற்றிருக்கும். நடுத்தர மொபைல்களில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா பெற்றிருக்கும். லவற்றில் 13 மெகாபிக்ஸல் கேமராவும் பெற்றிருக்கும். உயர்ரக மொபைல்களில்  21 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா பெற்றிருக்கும்.
 •  மெகாபிக்சல்கள் மட்டுமல்லாமல் சிறப்பான படங்கள் மற்றும் வீடியோவினை தரவல்ல சென்சார்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எந்த மொபைல் வாங்கலாம் ? ஸ்மார்ட்போன் சாய்ஸ்
அடுத்து உங்கள் மொபைல்போன் செயல்திறன் என்ன ?

பிராசஸர் & ரேம்

 • சிறப்பான பிராசஸர் பெற்றுள்ள ஸ்மார்ட்போன் என்றால் செயல்திறன் மிக சிறப்பாகவும் வேகமான அனைத்து ஆப்ஸ் , கேம் போன்றவற்றை விரைவாக திறக்கவும் , செயல்படுத்தவும் முக்கிய பங்கினை பிராசஸர் வெளிப்படுத்தும்.
 • குவால்காம் ஸ்னாப்டிராகன் மற்றும் மீடியாடெக் போன்றவை ஆண்ட்ராய்டு மொபைல்களில் இருக்கும். ஆப்பிள் மொபைல்களில் ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போனில் சிப் பிராசஸர் இருக்கும்.
 • பெரும்பாலான மொபைல்களில் 1ஜிபி ரேம் குறைந்தபட்ச ரேமாக இடம்பெற்று வருகின்றது. மேலும் 2ஜிபி , 3 ஜிபி , 4 ஜிபி , 5 ஜிபி மற்றும் 6 ஜிபி வரையிலான ரேம் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.
 • பிராசஸர்களில் ஸ்னாப்டிராகன் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். ரேம் தேர்வில் குறைந்தபட்சமாக 2ஜிபி ரேம் தேர்வு செய்யலாம். கூடுதல் திறன் கொண்ட ரேம் மொபைல்கள் பட்ஜெட்டை பொறுத்து மாறுபடலாம்.
அடுத்த சில ஆப்ஸ்களை நீக்கவும் போதுமான நினைவகம் இல்லை..!
எந்த மொபைல் வாங்கலாம் ? ஸ்மார்ட்போன் சாய்ஸ்

மெம்மரி

 • மெம்மரி இல்லை என அறிவிப்பு வெளியானலே எந்த ஆப்ஸ் நீக்குவது என குழப்பம்தான் அதிகமாக எழும் எனவே உங்கள் ஸ்மார்ட்போன் தேர்வில் இன்ட்ரனல் மெம்மரி அதிகம் உள்ளதை தேர்வு செய்யவும்.
 • 8ஜிபி இன்ட்ரனல் மெம்மரி முதல் 128 ஜிபி வரையிலான வகையில் கிடைக்கின்றது. மேலும் மைக்ரோஎஸ்டி கார்டு ஆப்ஷனும் கிடைக்கின்றது.
 • சில டாப் பட்ஜெட் மொபைல்களில் மைக்ரோஎஸ்டி கார்டு இடம்பெறுவதில்லை என்பதனால் அதிகபட்ச நினைவக திறன் கொண்ட மாடலை தேர்வு செய்யவேண்டும்.
 • குறைந்தபட்ச இன்ட்ரன்ல் மெம்மரி 32ஜிபி இருக்கும் மொபைல்களை தேர்வு செய்தால் நல்லது.
அடுத்து.. பேட்டரி இல்லை

பேட்டரி

 • மிக முக்கிய காரனியான ஸ்மார்ட்போன் மொபைலின் பேட்டரி தேர்வில் mAh அதிகம் உள்ள மொபைல்களை தேர்வு செய்யலாம்.
 • நான்-ரீமுவெபிள் பேட்டரி மொபைல்களை விட ரீமுவெபிள் பேட்டரி உள்ள ஸ்மார்ட்போன் தேர்வு எதிர்காலத்தில் நல்லதாக அமையலாம்.
 • புதிய ஸ்மார்ட்போன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளும் வந்துள்ளன.

சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள்

புதிய தலைமுறை ஸ்மார்ட்போன்களில் கைரேகை ஸ்கேனர் , கண்கள் மூலம் திறக்கும் பையோமெட்ரிக் போன்ற முறைகளும் உள்ளன. இவைகள் உங்கள் பட்ஜெட்டை பொறுத்து தேர்வு செய்யலாம்.
எந்த மொபைல் வாங்கலாம் ? ஸ்மார்ட்போன் சாய்ஸ்

பிராண்டு

 • ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பிராண்டின் மதிப்பு மாறுபடும் என்னதான் சீனா மொபைல்களை நாம் வெறுத்தாலும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவினை சேர்ந்ததே ஆகும்.
 •  இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்துவரும் லெனோவா , லீஈகோ , சியாமி,  ஹூவாய் , இசட்டிஇ போன்றவை சீனாவை சேர்ந்த நிறுவனங்களாகும்.  சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் மிக சிறப்பான பங்களிப்பினை பெற்றுள்ளது.
 • மைக்ரோமேக்ஸ், லாவா , கார்பன் , ஐ  பால் போன்ற இந்திய நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ள பிராண்டுகள் ஆகும்.
இனி உங்கள் கையில் உலகம் சுழல புதிய ஸ்மார்ட்போன் வாங்க தயாராகுங்கள்….
இந்த பதிவு பிடிச்சிருந்தா நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here