வருகின்ற பிப்ரவரி 26ந் தேதி நடைபெற உள்ள MWC 2017 அரங்கில் எல்ஜி G6 மொபைல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன் கருவியாக எல்ஜி ஜி6 விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எல்ஜி G6 மொபைல் டீஸர் வெளியீடு - MWC 2017

எல்ஜி G6 மொபைல்

புதிதாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ டீஸர் வாயிலாக எல்ஜி ஜி6 கருவி ஒரு நீர்புகா அம்சம் கொண்டிருப்பதுடன் தூசி போன்றவற்றில் பாதுகாக்கும் அமைப்புடன் மெட்டல் பாடி அமைப்புடன் விளங்கும் என உறுதியாகியுள்ளது.

5. 7 அங்குல QHD திரையுடன் வரவுள்ள இக்கருவியில் 6 ஜிபி ரேம் ஆப்ஷனுடன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகின்ற வகையில் அமைந்திருக்கும். இதில் மிக சிறப்பான புகைப்படத்தை பெறும் வகையில் பல்வேறு உயர்தர அம்சங்களை பெற்ற 12 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்கும். 64GB மற்றும் 128GB என இருவிதமான உள்ளடக்க நினைவகத்துடன் நீக்கமுடியாத வகையிலான 3200mAh பேட்டரி நாள் முழுமைக்கும் சிறப்பான வகையில் சேமிப்பினை கொடுக்கும்.

முழுமையான விபரங்கள் பிப்ரவரி 26ந் 12:00PM or 4:30PM IST வெளிவரும்.இணைந்திருங்கள் தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை படிக்க – fb/gadgetstamilan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here