எல்ஜி G6 ஸ்மார்ட்போன் விலை ரூ.51,990

இந்தியாவில் எல்ஜி G6 ஸ்மார்ட்போன் ரூபாய் 51,990 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அமேஸான் வழியாக எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்பட உள்ளது.

எல்ஜி G6 ஸ்மார்ட்போன்

உலகின் முதல் டால்பி விஷன் மற்றும்  HDR10 நுட்பங்களை பெற்ற மொபைலாக வந்துள்ள ஜி6 கருவியில், கூகுள் அசிஸ்டென்ட் ,  360-டிகிரி கேமரா , விரிச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality -VR) உள்பட பலவேறு விதமான நவீன வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.

மெட்டல் பாடியுடன் 5.7 அங்குல QHD திரையுடன் வந்துள்ள ஸ்மார்ட்போனில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 Soc பிராசஸருடன் இணைந்த 4GB ரேம் உடன் இணைந்த 32GB மற்றும் 64GB வரையிலான இரு வகையான உள்ளடங்கிய சேமிப்பை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 256GB வரை சேமிப்பு திறனை நீட்டிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி6 கேமரா

பின்புறத்தில் அமைந்துள்ள இரட்டை கேமராக்கள் 13 மெகாபிக்சலுடன் அமைந்து சிறப்பான படங்கள் மற்றும் உயர்தர 4கே ஹெச்டி வீடியோவை பெறும் வகையில் அமைந்துள்ளது. முன்புறத்தில் பெற்றுள்ள 5 மெகாபிக்சல் கேமரா செல்ஃபீ மற்றும் வீடியோ காலிங் வசதிக்கு ஏற்றதாக இருக்கும். OIS எனப்படும் சிறந்த படங்களை தர உதவும் அமைப்பும் பெற்று விளங்குகின்றது.

 

எல்ஜி ஜி6 பேட்டரி

நீக்க முடியாத வகையிலான அம்சத்தை பெற்றுள்ள பேட்டரியில் மிகவேகமாக சார்ஜ் ஏறும் குயீக் சார்ஜ் 3.0 வினை பெற்று 3330mAh செயல்திறனை பேட்டரி வெளிப்படுத்தும்.

மற்றவை

வாட்டர் ப்ரூஃப் , தூசியிலிருந்து பாதுகாக்கும் ரெசிஸ்டென்ட் , கைரேகை ஸ்கேனர் , ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் தளத்தில் செயல்படுகின்ற ஜி6 மொபைலில் Wi-Fi 802.11/b/g/n/ac, பூளூடுத் 4.2, ஜிபிஎஸ், 4G LTE, VoLTE, USB Type-C 2.0 மற்றும் என்எஃப்சி போன்றவை இடபெற்றுள்ளது.

இதுவரை கூகுள் பிக்சல் மொபைல்களில் மட்டுமே இருந்த வந்த கூகுள் அசிஸ்டென்ட் எல்ஜி G6 மொபைலில் முதன்முறையாக கூகுள் அசிஸ்டென்ட் வசதி சேர்க்கப்பட்டு OK Google வாயிலாக நேவிகேஷன் , வானிலை , வைஃபை உள்பட பல வசதிகளை பெறலாம்.

எல்ஜி G6 மொபைல் விலை

கருப்பு மற்றும் பிளாட்டினா போன்ற வண்ணங்களுடன் வந்துள்ள எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனின் விலை ரூபாய் 51,990 ஆகும்.

எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் அமேஸான் வழியாக எக்ஸகுளூசிவாக விற்பனைக்கு கிடைக்கும். மேலும் ஆஃபலைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

ஜி6 சிறப்பு சலுகைகள்

  • அமேஸான் தளத்தில் வாங்குபவர்களுக்கு ரூபாய் 10,000 வரை சிறப்பு சலுகையாக எஸ்பிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் பெறலாம்.
  • மேலும்  எல்ஜி டோன் Active+ HBS-A100 ஹெட்செட்கள் 50 சதவீத விலையில் சலுகையில் கிடைக்கும்.
  • எல்ஜி தளம் வழியாக முன்பதிவு செய்பவர்கள் மற்றும் ஆஃப்லைன் வழியாக வாங்குபவர்களுக்கு EA ஸ்பெஷல் பரிசாக குக்கீ ஜாம் , டெம்பிள் ரன் 2 , ஸ்பைடர்மேன் அன்லிமிடேட் என ரூ.14,100 மதிப்புள்ள சலுகைகள் 6 மாதங்களுக்கு கிடைக்கும்.
  • மேலும் எல்ஜி  தளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.7000 வரை சலுகைகள் பெறலாம்.
  • இவை அனைத்தும் மே 31 வரை மட்டுமே வழங்கப்படும்

ஜியோ வாடிக்கையாளர்கள் ரூபாய் 309 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்தால் மாதம் 10ஜிபி கூடுதல் டேட்டா மாதந்தோறும் மார்ச் 2018 வரை பெறலாம்.

Recommended For You