எல்ஜி க்யூ சீரிஸ் தொடர்பான டீசருக்கு பிறகு தற்போது எல்ஜி Q6, Q6 பிளஸ் மற்றும் Q6a போன்ற ஸ்மார்ட்போன்கள் முழுவிஷன் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எல்ஜி Q6, Q6 பிளஸ் Q6a ஃபுல்விஷன் டிஸ்பிளே வெளியானது

எல்ஜி Q6, Q6 பிளஸ் Q6a

எல்ஜி நிறுவனத்தின் ஃபிளாக்‌ ஷிப் கில்லர் மாடலாக விளங்கும் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனின் பின்னணியான நீட்டிக்கப்பட்ட மாடல்களான இந்த மூன்று Q6, Q6 பிளஸ் மற்றும் Q6a மாடல்கள் 18:9 ஆக்ஸ்பெட் விகிதம் கொண்டதாக ஃபுல்விஷன் டிஸ்பிளவுடன் வந்துள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

மூன்று மாடல்களும்  5.5 அங்குல திரையுடன் 2160×1080 பிக்சல் தீர்மானத்தை பெற்றிருப்பதுடன் உயர்ரக ஹெச்டி திரையுடன் முழுவிஷன் டிஸ்பிளே கொண்டதாக வந்துள்ளது. இவற்றில் LG Q6+ கருப்பு, பிளாட்டினம் மற்றும் நீல நிறங்களிலும், LG Q6 கருப்பு, பிளாட்டினம், கோல்டு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை கொண்டதாக மற்றும் Q6a நிறங்கள்  கருப்பு, பிளாட்டினம் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்க உள்ளது.

பிராசஸர் & ரேம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர் கொண்டு இயக்கப்படுகின்ற மூன்று க்யூ6 மாடல்களிலும் ரேம் விபரம் பின் வருமாறு ;-

Q6+ ஸ்மார்ட்போனில் 4GB ரேம் பெற்று  64GB சேமிப்பு வசதியை பெற்றுள்ளது.

Q6 ஸ்மார்ட்போனில் 3GB ரேம் பெற்று  32GB சேமிப்பு வசதியை பெற்றுள்ளது.

Q6a ஸ்மார்ட்போனில் 2GB ரேம் பெற்று  16GB சேமிப்பு வசதியை பெற்றுள்ளது.

கேமரா

கேமரா துறையில் மூன்று மாடல்களுமே எல்இடி ப்ளாஷ் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என வைட்ஏங்கிள் சென்சார் கொண்ட 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

எல்ஜி Q6, Q6 பிளஸ் Q6a ஃபுல்விஷன் டிஸ்பிளே வெளியானது

பேட்டரி

எல்ஜி ஜி6 மாடலை போலவே இந்த மூன்றிலும் ஒரே 3000mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

மற்றவை

ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தின் பின்னணியாக பெற்ற எல்ஜி UX 6.0 தளத்துடன் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 4.1, என்எஃப்சி, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவற்றின் ஆதரவை கொண்டுள்ளது.

விலை

விலை குறித்து எந்த அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியிடப்படாத நிலையில் விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ஆசியா சந்தையில் கிடைக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here