ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு

சீனாவின் பிரசத்தி பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக் ஷிப் கில்லர் மாடலாக களமிறங்க உள்ள ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் மாடலின் டீசரை ஹலோ 5 என வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் வரிசை மொபைல்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்த மாடலாக வரவுள்ள 5 மொபைலில் 8 ஜிபி ரேம் ஆப்ஷன் இரட்டை முன் மற்றும் இரட்டை பின் கேமரா போன்றவற்றை பெற்றதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் இணையத்தில் வெளியான படங்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனில் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் இரட்டை கேமரா ஆப்ஷனுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக விளங்குகின்றது. பின்புறத்தில் 23 மெகாபிக்சல் இரட்டை கேமரா பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வசதியுடன் 8 ஜிபி ரேம் ஆப்ஷன் 128GB உள்ளடங்கிய மெமரி பெற்று ஆண்ட்ராய்டு நௌகட் 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஹைட்ரஜன் ஓஎஸ் இடம்பெற்றிருக்கும்.

அடுத்த சில வாரங்களில் ஒன் பிளஸ் 5 ஸ்மார்ட்போன் பற்றி முழுவிபரங்களும் அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

Recommended For You