ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி
 

வரும் மே மாதம் 14 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஒன்பிளஸ் 7 வரிசை மாடல்களில் மொத்தம் மூன்று வேரியன்டுகள் விற்பனைக்கு வெளியிடப்படுவதுடன் கூடுதலாக 5ஜி தொலைத் தொடர்பு ஆதரவு மாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்பலாம்.

இந்த முறை ஒரே சமயத்தில் ஒன்பிளஸின் 7 வரிசை மொபைலின் மற்ற வேரியன்டுகள் ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7 வெனிலா , ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி என வரக்கூடும்.

ஒன்பிளஸ் 7 ப்ரோ ரீலிஸ் தேதி மே 14

டெக் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிட்டு வரும் இஷான் அக்ர்வால் தனது டிவிட்டரில் முன்பாக ஒன்பிளஸ் நிறுவன 7 வரிசை தொடர்பான முக்கிய வேரியன்ட் விபரங்களை வெளியிட்டதை தொடர்ந்து அறிமுக தேதியை மே 14, 2019 என உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அதிகார்வப்பூரவ விற்பனைக்கு வெளியிடும் தேதியை சீனாவை சேர்ந்த இந்நிறுவனம் வெளியிடவில்லை.

ஒன்பிளஸின் புதிய 7 ப்ரோ மாடலில் டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே, 6.67 இன்ச் சூப்பர் ஆப்டிக் டிஸ்ப்ளே உடன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு பாப் அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கலாம். பிரைமரி சென்சார் ஆப்ஷனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்பட்டு 48 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் சென்சார் கொண்டு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை பின்பற்றி செயல்படும் மாடலாக விளங்கும்.

இந்த போனினை இயக்க குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் பெற்றதாக விளங்கும் என தெரிய வந்துள்ளது. ஆனால் மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் விற்பனைக்கு வரும்போது வெளிவரக்கூடும்.

ஒன்பிளஸ் டிவி வருகை விபரம்

ஒன்பிளஸ் நிறுவனம், டிவி மாடலை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனம், அதீத செயல்திறன் மிக்க ஸ்மார்ட் தொலைக்காட்சி உருவாக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் தற்போது டெக் உலகில் வைரலாகி வரும் மடிக்கும் முறையிலான ஸ்மார்ட்போன் தயாரிப்பதற்கான திட்டத்திற்கு என இதுவரை எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என இந்நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஆட்டோமொபைல் சந்தையில் நுழைய ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டாளர் என ஜிஎஸ்எம்அரினா தகவல் வெளியிட்டுள்ளது.