2016 ஆம் ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரவுள்ள ஒன்ப்ளஸ் 3 ஸ்மார்டபோன் வரும் ஜூன் 14ந் தேதி அதாவது நாளை அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் ஜூன் 15ந் தேதி விற்பனைக்கு வருகின்றது. ஆனால் ஒன்ப்ளஸ் 3 விலை ரூ.27,999 என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இணைய உலகில் ஒன் ப்ளஸ் 3 பற்றி எண்ணற்ற தகவல்கள் படங்கள் என பல வெளியாகியுள்ள நிலையில் நாளை VR நிகழ்ச்சி வழியாக சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி ஹைட்செட் அணிந்து பார்த்தால் 360 டிகிரி கோண அளவில் அறிமு நிகழ்ச்சியை பார்க்க இயலும். இந்திய நேரப்படி நாளை இரவு 10 மணிக்கு நிகழ்ச்சியை நேரடியாக கானலாம்.

ஒன்ப்ளஸ் 3 வதந்திகளும் உண்மையும்

  • பல செய்திகள் வெளியாகியுள்ள நிலை ஒன் ப்ளஸ் 3 மொபைல் மொத்தம் 6 விதமான வேரியண்டில் இரு விதமான ரேம் ஆப்ஷனை பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • ஒன்ப்ளஸ் 3 மொபைலின் 4GB ரேம் வேரியண்டில் 32GB , 64GB மற்றும் 128GB என மூன்று விதமான வேரியண்டில் வரவுள்ளது.
  • ஒன்ப்ளஸ் 3 மொபைலின் 6GB ரேம் வேரியண்டில் 32GB , 64GB மற்றும் 128GB என மூன்று விதமான வேரியண்டில் வரவுள்ளது.
  • முந்தைய மொபைல் ஒன்ப்ளஸ் 2 யில் மைக்ரோஎஸ்டிஆப்ஷன் இல்லை  வரவுள்ள மொபைலில் 128GB மைக்ரோஎஸ்டி கார்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.
  • முந்தைய மாடல்களை போலவே ஸ்டேன்ட் ஸ்டோன் யூனிக் மெட்டல் பாடியை பெற்றிருக்கலாம்.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் பெற்றிருக்கலாம்.
  • 16MP பிரைமரி  கேமரா  8MP முன்பக்க கேமரா பெற்றிருக்கலாம்.
  • ஒன்ப்ளஸ் 3 மொபைலில் 6.0 மார்ஷ்மெல்லோ ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை அடிப்பையாக கொண்ட ஆக்சிஜன் ஒஎஸ் தளத்தில் இயங்கும்..
  • 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளைவினை பெற்றிருக்கும்.
  • அமேசான் தளத்தின் வாயிலாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவது உறுதியாகியுள்ள நிலையில் அமேசான் தளத்தில் தற்பொழுது வினாடி வினா போட்டியை ஆப்ஸ் வாயிலாக வழங்கி வருகின்றது. 12 மொபைல்களை இலவசமாக வெல்லாம்,  Amazon-app
ஒன்பிளஸ் 3கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதிகார்வப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்…

ஒன்பிளஸ் 3 விலை எவ்வளவு

இந்திய சந்தைக்கு முதற்கட்டமாக 7200 மொபைல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மொபைலின் இறக்குமதி விலையாக ரூ. 22,858 என குறிப்பிடப்பட்டுள்ளது .  இன்று ஆங்கில  நாளிதழில் வெளியாகியுள்ள விளம்பரத்தின் வாயிலாக ஒன்பிளஸ் 3 மொபைல் விலை ரூ.27,999 என உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் 6GB ரேம் கொண்ட 64GB இன்ட்ரனல் மெம்மரி கொண்ட் மொபைல் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் எக்ஸ்குளூசிவாக அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

அமேசான் தளத்தினை பார்வையிட ; Amazon.in

நேரடி அறிமுகத்தினை கானுவதற்க்கு லைவ் வீடியோ இணைப்பு… ஒன் பிளஸ் 3 அறிமுகம் இந்திய நேரப்படி நாளை இரவு 10 மணிக்கு..

OnePlus 3 details leaked