இந்தியாவில் இன்றைய தினம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒன் பிளஸ் 5 ஸ்மார்ட்போன் பற்றி பல்வேறு விபரங்களை நாம் முன்கூட்டியே அறிந்த நிலையில் ஒன் பிளஸ் 5 Vs ஒன் பிளஸ் 3T ஒப்பீடு செய்து பார்க்கலாம்..!
ஒன் பிளஸ் 5 Vs ஒன் பிளஸ் 3T
ஒன்பிளஸ் தயாரிப்பாளரின் முந்தைய பதிப்பு மாடலாக விளங்குகின்ற ஒன்பிளஸ் 3டி இன்றைக்கும் பலரால் விரும்பப்படுகின்ற அற்புதமான மாடலாகும்.
புதிதாக வந்துள்ள ஒன்பிளஸ் 5 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் என இருவகைகளில் டூயல் கேமரா உள்பட பல்வேறு கூடுதல் அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது. எனவே இருமாடலுக்கும் இடையில் உள்ள நுட்பவிபரங்களை ஒப்பீட்டு காணலாம்.
ஒன்பிளஸ் 3டி மொபைலை விட கூடுதலான கேமரா செயல்திறன் என முந்தைய மாடலில் இருந்து முற்றிலும் மேம்பட்டதாக வந்துள்ளது.
ஒப்பீடு அட்டவனை கீழே வழங்கப்பட்டுள்ளது…!
நுட்பங்கள் | ஒன்பிளஸ் 5 | ஒன்பிளஸ் 3T |
டிஸ்பிளே | 5.5 இஞ்ச், 1920x1080p Full HD | 5.5 இஞ்ச், 1920x1080p Full HD |
ஓஎஸ் | ஆண்ட்ராய்டு 7.0 | ஆண்ட்ராய்டு 7.0 |
பிராசஸர் | 2.45GHz ஸ்னாப்டிராகன் 835Soc | 2.35GHz ஸ்னாப்டிராகன் 821Soc |
ரேம் | 6GB/8GB | 6GB |
கேமரா | 16MP+20MP -ரியர் , 16MP- முன் | 16MP-ரியர் , 16MP- முன் |
பேட்டரி | 3300mAh | 3400mAh |
சேமிப்பு | 64GB/128GB | 64GB/128GB |
ஆதரவு | 4G, LTE, 3G, Wi-Fi, Bluetooth, USB Type C, NFC and GPS | 4G, LTE, 3G, Wi-Fi, Bluetooth, USB Type C, NFC and GPS |
இன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ் 5 மொபைல் விலை ரூ. 32,000 எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விபரங்களுக்கு இணைந்திருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் இணையதளத்துடன்..!
For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com