நாளை சீனாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒன் ப்ளஸ் 5 இந்தியாவில் ஜூன் 22ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.  என இருவகைகளில் வரவுள்ள ஒன் ப்ளஸ் 5 பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒன் ப்ளஸ் 5 மொபைல் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

ஒன் ப்ளஸ் 5 மொபைல்

பல்வேறு படங்கள் மற்றும் தகவல்கள் என பெரும்பாலான ஒன் ப்ளஸ் 5 பற்றி விபரங்கள் இணையங்களில் வெளியாகி விட்ட நிலையில் விலை விபரம் பற்றி தகவல்களும் வெளிவந்துவிட்டது.

அறிமுகம்

நாளை சீனாவில் வெளியிடப்பட உள்ள ஒன்ப்ளஸ் 5 மொபைலுக்கு முன்பதிவு jd.com என்ற இணையதளத்தில் நடைபெற்ற வரும் நிலையில் சீனாவில் 5.25 லட்சத்துக்கு மேற்பட்ட முன்பதிவுகளை கடந்த மூன்று நாட்களில் பெற்று அசரடித்து வருகின்றது. இந்திய சந்தையில் மும்பையிலிருந்து ஜூன் 22ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள நிலையில் அன்றைய தினமே 4.30 மணிக்கு அமேசான் வாயிலாக விற்பனை தொடங்கப்பட உள்ளது.

ஒன் ப்ளஸ் 5 மொபைல் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

டிசைன் மற்றும் பிராசஸர்

ஏறக்குறைய பல்வேறு படங்கள் மற்றும் டிசைன் விபரங்கள் வெளியாகி நிலையில் இறுதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடைய நடந்த கிரிக்கெட் போட்டியில் முழு டிசைனும் வெளியாகி ஐபோன் 7 போன்ற அதே டிசைன் பெற்றிருப்பதனை உறுதி செய்யப்பட்டு விட்டது.  5.5 அங்குல QHD டிஸ்பிளே பெற்று 1440×2560 பிக்சல் தீர்மானத்துடன் 835 சிப்செட் பெற்ற ஸ்மார்ட்போனாக வரவுள்ள இதில் 6ஜிபி ரேம் 64ஜிபி உள்ளடங்கிய மெமரி வகையில் மற்றும் 8ஜிபி ரேம் வேரியன்டில் 128ஜிபி உள்ளடங்கிய மெமரி என இரு ஆப்ஷனை பெற்றிருக்கும்.

ஒன் ப்ளஸ் 5 மொபைல் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

கேமரா

Dual Camera. Clearer Pictures என்ற கோஷத்துடன் டீசர் செய்யப்பட்டு வருகின்ற இந்த கருவியில் இரண்டு 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்பிற்கு 8 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கலாம்.

ஒன் ப்ளஸ் 5 மொபைல் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

பேட்டரி மற்றும் வசதிகள்

3300mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட உள்ள ஆண்ட்ராய்டு 7.0 அடிப்படையிலான ஸ்மார்ட்போனில் 4ஜி உள்பட பல்வேறு விதமான வசதிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

விலை

இணையதளங்களில் பரவலாக வெளியான விலையின் அடிப்பையில் ஒன் ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் மாடலின் 6ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி உள்ளடங்கிய மெமரி கொண்ட மாடல் ரூபாய் 32,999 விலையில் கிடைக்க பெறலாம்.

ஒன் ப்ளஸ் 5 மொபைல் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

மற்றொரு வேரியன்டாக எதிர்பார்க்கப்படுகின்ற oneplus 5 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியை கொண்ட மாடல் ரூபாய் 37,999 விலையில் கிடைக்க பெறலாம்.

நிச்சியமாக சீனா,இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மிக சவாலான ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை மதியம் முழுமையான விபரங்கள் வெளியாகிவிடும். எனவே தொடர்ந்து இணைந்திருங்கள் கேட்ஜெட் தமிழன் தளத்துடன்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here