ஒப்போ ஏ57 மொபைல் பிப்ரவரி 3 முதல்

வருகின்ற பிப்ரவரி 3ந் தேதி செல்பீ பிரியர்களுக்கு ஏற்ற ஒப்போ ஏ57 செல்பீ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஒப்போ ஏ57 மொபைல் விலை ரூ.16,000 முதல் 18,000 விலைக்குள் அமையலாம்.

ஒப்போ ஏ57 மொபைல்

கடந்த நவம்பர் மாதம் சீனாவில்அறிமுகம் செய்யப்பட்ட ஏ57 மாடலில் கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கின்றது. சீனாவில் ரூ.16,000 விலையில் கிடைக்கின்ற இந்த மொபைலில் பல்வேறு விதமான வசதிகளை பெற்றதாக விளங்குகின்றது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்பையாக கொண்ட கலர்ஓஎஸ்3.0 தளத்தில் செயல்படுகின்ற ஏ57 ஸ்மார்ட்போனில் 5.2 அங்குல எச்டி (720×1280) எல்சிடி டிஸ்ப்ளேவினை 2.5டி வளைந்த கண்ணாடி பெற்று 1.4 GHz க்வால்காம் ஸ்னாப்டிராகன் 435 SOC உடன் இணைந்த அட்ரெனோ 505 GPU கொண்ட 3ஜிபி ரேம் மூலம் செயல்படுகின்றது.

சிறப்பான படங்கள் மற்றும் செல்பீ வெளிப்படுத்தக்கூடிய 16-மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் எல்இடி ப்ளாஷ், எப்/ 2.2, மற்றும் பிடிஏஎப் கொண்ட 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா கொண்டுள்ளது.

32 ஜிபி வரை ஒரு உள்ளடிக்கிய சேமிப்பு கூடுதலாக 128ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மெமரி நீடிக்க இயலும்.

ஹோம் பட்டனுடன் இணைக்கப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் 2900எம்ஏஎச் பேட்டரி திறன் செயல்படுகின்ற ஏ57 கருவியின் எடை 147 கிராம் ஆகும். இரட்டை சிம் ஆதரவு , 4ஜி, எல்டிஇ, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ப்ளூடூத் வி4.1, வைஃபை, ஜிபிஎஸ், யூஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவை துனை விருப்பங்களாக கிடைக்கின்றது.

Recommended For You