ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் செல்ஃபீ பிரியர்களுக்கான ஒப்போ F3 பிளஸ் பிளாக் வண்ணம் வேரியன்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ F3 பிளஸ் பிளாக் கலர் வேரியன்ட் அறிமுகம்

ஒப்போ F3 பிளஸ்

  • முன்புறத்தில் இரட்டை கேமரா கொண்ட செல்ஃபீ பிரயர்களுக்கான F3 பிளஸ் மொபைல் வந்துள்ளது.
  • 16 மெகாபிக்சல் கேமரா முன்புறத்தில் இடம்பெற்றுள்ளது.
  • ரூபாய் 30,900 விலையில் F3 பிளஸ் பிளாக் மாடலும் கிடைக்கின்றது.

ஒப்போ F3 பிளஸ் பிளாக் கலர் வேரியன்ட் அறிமுகம்

F3 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஃபுல் எச்டி ஐபிஎஸ் எல்சிடி 1080×1920 பிக்சல் தீர்மானத்துடன் கொண்ட திரையுடன் வந்துள்ளது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 635 சிப்செட் பெற்ற 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 256GB வரை மைக்ரோ எஸ்டி நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் செல்ஃபி முன்புற கேமரா 16 எம்பி, மற்றும் 8 எம்பி இரட்டை எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகு கூட்டி எடுக்க ஏதுவாக பல்வேறு வகையான ஃபில்ட்டர்கள் மற்றும் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேமரா 4K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளது. பின்புறத்தில் 16 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தில் செயல்படுகின்ற  F3 பிளஸ் மொபைல் போனில் ஹைப்ரிட் டூயல்-சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போன்ற ஆதரவு அம்சங்களை கொண்டாதாக விளங்குகின்றது. 4000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் விரைவாக சார்ஜிங் ஏறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ F3 பிளஸ் பிளாக் கலர் வேரியன்ட் அறிமுகம்

இதுவரை கோல்டு வண்ணத்தில் கிடைத்த ஒப்போ F3 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.30,990 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் பிளாக் வண்ணத்திலும் கிடைக்க தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here