செல்ஃபீ எக்ஸ்பெர்ட் ஓப்போ F3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

சிறப்பான செல்ஃபீ படங்களை பெறும் வகையிலான செல்ஃபீ எக்ஸ்பெர்ட் என ஓப்போ அழைக்கும் ஓப்போ F3 ஸ்மார்ட்போன் ரூபாய் 19,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஓப்போ F3 ஸ்மார்ட்போன்

  • ஓப்போ F3 ஸ்மார்ட்போன் விலை ரூ.19,999 ஆகும்.
  • 5.5 இன்ச் முழு ஹெச்டி டிஸ்பிளே கொண்ட மொபைலாக வந்துள்ளது.
  • முன்புறத்தில் செல்ஃபீ படங்களுக்கு என இரட்டை கேமரா வசதி வழங்கப்பட்டுள்ளது.

அறிமுகம் செய்யப்படுள்ள புதிய ஓப்போ எஃப்3 ஸ்மார்ட்போனில் செல்ஃபீ படங்களுக்கு என முன்பக்கத்தில் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

டிசைன்

ஓப்போ எஃப்3 பிளஸ் ஸ்மார்ட்போனை போன்றே மெட்டல் பாடியுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 2.5D வளைந்த கொரில்லா கிளாஸூடன் கூடிய முன்புறத்தில் அமைந்துள்ள ஹோம் பட்டனிலே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே

ஓப்போ எஃப்3 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் முழு ஹெச்டி டிஸ்பிளே உடன் 1920 X 1080 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக அமைந்து கைரேகை மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.

பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஓப்போ கலர் ஓஎஸ் பெற்று மீடியாடெக் MT6750 பிராசஸர் உடன் இணைந்த 4ஜிபி ரேம் கொண்டு செயல்படுவதற்கு ஏதுவாக 32GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் 256GB  வரை மெமரியை அதிகரிக்க மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேமரா

உயர்தர செல்ஃபீ படங்களை பெறுவதற்கு முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள இரட்டை கேமரா ஆப்ஷனில் 16MP + 8MP f/2.0 அப்ரேச்சர் ,  வழங்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக ஹெச்டி தரத்திலான படங்கள் உள்பட அற்புதமாக இரவு நேரங்களிலும் படத்தை பெறலாம்.

இதுதவிர பிரைமரி கேமரா 13MP திறனுடன் சிறப்பான படங்கள் மற்றும் வீடியோ பெற உதவியாக அமைந்துள்ளது.

பேட்டரி

நீக்க இயலாத 3,200mAh பேட்டரி திறனை பெற்றுள்ள ஓப்போ F3 கருவியின் செயல்திறன் நாள் முழுமைக்கும் கிடைக்கும் வகையிலான பெர்ஃபாமென்ஸை பெற்றுள்ளது.

மற்றவை

கைரேகை ஸ்கேனர் உள்பட 4G VoLTE, வை-ஃபை 802.11 a/b/g/n/ac (2.4GHz and 5GHz), புளூடூத் v4.0, ஜிபிஎஸ்/ A-ஜிபிஎஸ், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போன்றவை துனை விருப்பங்களாக வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் வருகை

ரூபாய் 19,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ள ஓப்போ F3 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஃபீளிப் கார்ட் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகின்ற மே 13ந் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சிறப்பு சலுகையாக முன்பதிவு செய்யும் மூன்று நபர்களுக்கு ஐசிசி ஃபேனல் போட்டியை லன்டனில் காண அழைத்து செல்லப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அனியின் ஸ்பான்சாரக ஓப்போ உள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் அனியின் ஆடையை வெளியிட்டுள்ளது.

Recommended For You