அல்காடெல் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளின் புதிய X1 ஸ்மார்ட்போனில் கண்கள் மூலம் இயங்கும் Eye-D அன்லாக் வசதியை பெற்றுள்ள X1 விலை ரூ.15,999 ஆகும்.

ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்பட உள்ள அல்காடெல் X1 மொபைல்போனில் உள்ள பிரத்யேகமான Eye-D அன்லாக் எனப்படும் எவ்விதமான தொடுதல் இல்லாமல் கண்களை கொண்டு மொபைல் போனை அன்லாக் செய்யவல்ல பையோ மெட்ரிக் முறையை பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் இயங்கும் எக்ஸ்1 மொபைலில் 5 இன்ச் சூப்பர் அமோல்டு ஹெச்டி டிஸ்பிளேவினை பெற்றுள்ளது. ஆக்டோகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 616 பிராஸெசர் உடன் இணைந்து செயல்படும் 2GB ரேம் , 16GB இன்ட்ரனல் மெம்ரி மற்றும் 128GB வரை மைக்ரோஎஸ்டி கார்டு துனையுடன் நினவகத்தினை பெறமுடியும்.

13MP ரியர் கேமராவில் இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 5MP முன்பக்க கேமரா எல்இடி ஃபிளாஸ் பெற்றுள்ளது. 2150mAh பேட்டரி , இரட்டை சிம் கார்டு (மைக்ரோ சிம் மற்றும் நானோ சிம் ), 4G LTE தொடர்பினை பெற இயலும்.

அல்காடெல் எக்ஸ்1 மொபைல் சில்வர் பிளாக் மற்றும் சில்வர் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும்.

அல்காடெல் X1 மொபைல் வாங்க

Flipkart மூலம் வாங்க ;     

AMAZON தளத்தில் வாங்க  Alcatel X1 mobile

Alcatel launched a new smartphone Alcatel X1 in India