கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் நோட் 3 லைட் மொபைலில் புதிய கோல்ட் வண்ணத்திலான எடிசன் ரூ.7, 499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் வழியாக எக்ஸ்குளூசிவாக வருகின்ற ஜூன் 9 ,2016 முதல் ஃபிளாஷ் விற்பனை தொடங்க உள்ளது.

கடந்த ஜனவரி 2016 முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கூல்பேட் நோட் 3 லைட் மொபைல் சுமார் 5 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில் இதனை அறிமுகம் செய்கின்றது. கோல்ட் எடிசனில் தொழில்நுட்ப விவரங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

5.0 இன்ச் ஐபிஎஸ் ஹெச்டி டிஸ்பிளேவுடன் ஆண்ட்ராய்டு 5.0  லாலிபாப் இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட கூல்UI 6.0 தளத்தில் 1.3GHz 64-BIT குவாட்கோர் MTK 6735 பிராசெஸருடன் 3GB ரேம் கொண்டு இயங்குகின்றது. 13MP ரியர் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது. மேலும் 5MP முன்பக்க கேமரா , 4G LTE, Wi-Fi, USB OTG  , 2500mAh  பேட்டரி போன்றவற்றுடன் 16GB இன்ட்ரனல் மெம்மரியுடன் 32GB வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்தி கொள்ள முடியும்.

ரூ. 6,999 விலையில் கூல்பேட் நோட் 3 லைட் மொபைல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  இவை பிளாக் , கேலசியர் வெள்ளை , சாம்பியன் வெள்ளை  ஆகும் . புதிய கோல்ட வண்ணத்தின் விலை ரூ.500 கூடுதலாக
ரூ.7, 499 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

கூல்பேட் நோட் 3 லைட் மொபைல் வாங்க ;  Coolpad Note 3 Lite