கூல்பேட் நோட் 5 லைட் C மொபைல் விலை ரூ.7,777

கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் நோட் 5 லைட் C கைப்பேசி ஆஃப்லைன் வழியாக விற்பனை செய்யப்பட உள்ள முதல் மாடலாகும். 2ஜிபி ரேம் பெற்று 16ஜிபி உள்ளடங்கிய மெமரி பெற்றுள்ளது.

கூல்பேட் நோட் 5 லைட் C

இந்நிறுவனத்தின் முதல் ஆஃப்லைன் மாடலாக விற்பனைக்கு கிடைக்க உள்ள நோட் 5 லைட் சி ஸ்மார்ட்போன் மோட்டோ சி பிளஸ், சியோமி ரெட்மி 4 மற்றும் யூ யூனிக்யூ 2 போன்றவற்றுக்கு எதிராக ஆகஸ்ட் 5 முதல் கிடைக்க உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

கூல்பேட் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின்  நோட் 5 லைட் சி ஸ்மார்ட்போன் கிரே மற்றும் கோல்டு ஆகிய நிங்களில் கிடைக்க உள்ள இதில் 5 அங்குல 720×1280 திரையுடன் 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் கூடியதாக வந்துள்ளது.

பிராசஸர் & ரேம்

ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை பெற்ற இந்த மொபைலில் 1.1GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் பெற்றதாக 2ஜிபி ரேம் உடன் கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் 64ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டை வசதிக்கான ஸ்லாட் கொண்டுள்ளது.

கேமரா துறை

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிரைமரி கேமரா பிரிவில் எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

நாள் முழுமைக்கான 2,500mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

மற்றவை

வைபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ சப்போர்ட் போன்றவற்றுடன் கூடிய நோட் 5 லைட் சி மொபைலில் இடம்பெற்றுள்ளது.

விலை

ஆகஸ்ட் 5 முதல் ஆஃப்லைனிலும், அமேசான் இணையதளத்தில் ஆகஸ்ட் 20 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள கூல்பேட் நோட் 5 லைட் C மொபைல் விலை ரூ.7,777 ஆகும்.

 

Recommended For You