ரூ.6,999 விலையில் கூல்பேட் மெகா 2.5டி (Coolpad Mega 2.5D ) ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தில் செயல்படும் கூல்பேட் மெகா 2.5D மொபைல் அமேசான் தளத்தின் வாயிலாக ஆகஸ்ட் 24 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

கூல்பேட் மெகா 2.5D ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

5.5 இன்ச் ஹெச்டி (1280 x 720 pixels) டிஸ்பிளே உடன் இனைந்த 2.5டி கிளாஸ் சிறப்பான வகையில் அமைந்திருக்கும். ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட கூல் யூஐ 8.0 தளத்தில் 1 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் 6735 குவாட்கோர் பிராசஸருடன் இணைந்த 3ஜிபி ரேம் பெற்றுள்ளது. 32ஜிபி சேமிப்பு திறனுடன் கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி 128ஜிபி வரை அதிகரித்து கொள்ளலாம்.
முன் மற்றும் பிரைமரி என இரு கேமராக்களும் 8 மெகாபிக்சல் பெற்றுள்ளது. பிரைமரி 8 மெகாபிக்சல் கேமராவில் எல்இடி பிளாஷ் , சோனி சென்சார், f/2,2 அப்ரேச்சர் போன்றவற்றை பெற்றுள்ளது.  
2500mAh பேட்டரி நாள் முழுமைக்கான பேக்கப் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. 4ஜி VoLTE , LTE , WiFi 802.11 b/g/n, பூளூடூத் 4.0, மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றின் ஆதரவுகளை பெற்றுள்ளது.
கூல்பேட் மெகா 2.5D ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

Specs for Coolpad Mega 2.5D 

 • Display – 5.5 Inch HD (1280 x 720 pixels) 2.5D curved glass
 • Processor – Mediatek 6735 Quad Core Clocked at 1.0 Ghz 
 • Ram – 3 GB RAM 
 • Display – 5.5 inch HD display. 
 • Storage – 16 GB internal storage can be expanded to 128 GB. 
 • OS – Android Marshmallow 6.0 , Cool UI 8.0.
 • Camera – 8 MP front camera and 8 MP 
 • Connectivity – 4G LTE + VOLTE , WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, and GPS.
 • Battery – 2500mAh
 • colors – Gold, Silver, and Champagne
 •  Price – Rs. 6,999
வருகின்ற ஆகஸ்ட் 24ந் தேதி அமேசான் இந்தியா வழியாக எக்ஸ்குளூசிவாக பிளாஷ் விற்பனையில் கிடைக்க உள்ளது. தற்பொழுது முன்பதிவு நடந்து வருகின்றது.
கூல்பேட் மெகா 2.5D ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here