சாம்சங் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி ஆன்5 புரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி ஆன் 7 புரோ இரு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஆன்5 புரோ விலை ரூ.9,190 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஆன்7 புரோ விலை ரூ. 11,190 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி ஆன்5 புரோ மற்றும் கேலக்ஸி ஆன்7 புரோ விற்பனைக்கு அறிமுகம்

அமேசான் தளத்தின் வாயிலாக எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்படும் கேலக்ஸி ஆன்5 புரோ மற்றும் கேலக்ஸி ஆன்7 புரோ ஸ்மார்ட்போன்கள்  ஆகஸ்ட் 31க்குள் முன்பதிவு செய்யும்பொழுது ரூ.6000 மதிப்புள்ள தாமஸ் குக் விடுமுறை சுற்றலா சலுகை கூப்பன் மற்றும் ஐடியா எக்ஸ்குளூசிவ் சலுகையாக 2ஜிபி (4ஜி/3ஜி/2ஜி) டேட்டா , 200 நிமிடம் அழைப்பு மற்றும் 200 குறுஞ்செயதி பெற ரூ.343 மட்டுமே.

கேலக்ஸி ஆன்5 புரோ ஸ்மார்ட்போன்

கேலக்ஸி ஆன்5 புரோ மொபைல்போன் 5 இன்ச் (720×1280 pixels) ஹெச்டி டிஸ்பிளே உடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இஎக்ஸ்நாயஸ் பிராசஸர் பெற்று 2ஜிபி ரேமுடன் இணைந்து செயல்படுகின்றது. இதில் 16 ஜிபி இன்டர்னல் மெம்மரி திறனுடன் 128 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தப்பட முடியும். ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்துடன் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா எல்இடி பிளாஷ் மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா பெற்றள்ளது.

  கேலக்ஸி ஆன்5 புரோவில் அல்ட்ரா டேட்டா சேவிங் , பைக் ரைடர்களுக்கான எஸ் பைக் மோட் மற்றும் பின்புற பேனல்களில் லெதரால் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன்5 புரோ நுட்ப விபரம்

 • திரை ; 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1280 × 720 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
 • பிராசஸர் ; 1.1 GHz குவால்காம் இஎக்ஸ்நாயஸ் 
 • ரேம் ; 2 GB 
 • கேமரா ; 8 MP பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ் 
 • முன்பக்க கேமரா ; 5 MP செல்ஃபீ கேமரா
 • சேமிப்பு ; 16 GB (MicroSD upto 64 GB) 
 • பேட்டரி; 2600mAh 
 • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட்
 • மற்றவை ;  4G , 3G, Bluetooth, WiFi, GPS
 • விலை ; 9,190
சாம்சங் கேலக்ஸி ஆன்5 புரோ மற்றும் கேலக்ஸி ஆன்7 புரோ விற்பனைக்கு அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி ஆன்7 புரோ

  கேலக்ஸி ஆன்7 புரோ மொபைல்போன் 5.5 இன்ச் (720×1280 pixels) ஹெச்டி டிஸ்பிளே உடன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பெற்று 2ஜிபி ரேமுடன் இணைந்து செயல்படுகின்றது. இதில் 16 ஜிபி இன்டர்னல் மெம்மரி திறனுடன் 128 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தப்பட முடியும். ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்துடன் 13 மெகாபிக்சல் ரியர் கேமரா எல்இடி பிளாஷ் மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா பெற்றள்ளது.

    கேலக்ஸி ஆன்7 புரோவில் அல்ட்ரா டேட்டா சேவிங் , பைக் ரைடர்களுக்கான எஸ் பைக் மோட் மற்றும் பின்புற பேனல்களில் லெதரால் செய்யப்பட்டுள்ளது.

  சாம்சங் கேலக்ஸி ஆன்7 புரோ

  • திரை ; 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1280 × 720 pixels)
  • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
  • பிராசஸர் ; 1. GHz குவால்காம் ஸ்னாப்டிராகன்
  • ரேம் ; 2 GB 
  • கேமரா ; 13 MP பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ் 
  • முன்பக்க கேமரா ; 5 MP செல்ஃபீ கேமரா
  • சேமிப்பு ; 16 GB (MicroSD upto 128 GB) 
  • பேட்டரி; 3000mAh சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட்
  • மற்றவை ;  4G  ,3G, Bluetooth, WiFi, GPS, 
  • விலை ; 11,190
  இரு மொபைல்களும் கோல்ட் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும். அமேசான் தளத்தில் வாங்கலாம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here