பணத்திற்கு ஏற்ப சிறப்பான மதிப்பினை வழங்கும் வகையில் கேலக்ஸி ஜே 2 சில வசதிகள் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது. புதிய வசதிகளாக கேலக்ஸி J2 பின்பக்க கவரில் அமைந்துள்ள ரிங் குளோவ் எல்இடி நோட்டிபிகேஷன் (Smart Glow ring notification) மொபைலில் வருகின்ற அழைப்புகள் , குறுஞ்செய்தி , மின்னஞ்சல் என அனைத்து அறிவிப்புகளுக்கும் தனித்தனியான வண்ணங்களில் ரிங்க வெளிச்சத்தை தரும். மேலும் பின்புற கேமராவில் செல்ஃபீ படங்கள் எடுக்கும்பொழுது முகத்தினை டிடெக்ட் செய்துவிட்டால் ரிங்க் க்ளோவ் ஆகும்.
மற்றொரு குறிப்படதக்க வசதியான டிஎஸ்பி ( Turbo Speed Technology- TST) எனப்படும் டர்போ ஸ்பீட் டெக்னாலஜி வாயிலாக நேட்டிவ் செயிலிகள் மிக வேகமாக அதாவது சாதரன செயல்பாட்டினை விட 40 சதவீத கூடுதல் வேகத்தை பெற்று விளங்கும்.
புதிய சாம்சங் கேலக்சி ஜே2 ஸ்மார்ட்போனில் 5 இன்ச் ஹெச்டி சூப்பர் AMOLED 720p டிஸ்பிளே பெற்றுள்ளது. 1.5 GHz குவாட்கோர் ஸ்பிரட்டிரம் SC8830 பிராசஸருடன் இணைந்த 1.5 GB ரேம் பெற்று ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தில் செயல்படுகின்றது. 8 ஜிபி இன்டரனல் மற்றும் 32ஜிபி மைக்ரோஎஸ்டி மெம்மரியை பயன்படுத்த இயலும்.
கேலக்சி J2 மொபைல் 8 மெகாபிக்ஸல் எல்இடி பிளாஷ் உடன்கூடிய ஆட்டோஃபோகஸ் மற்றும் f/2.2 அப்ரேசர் கேமரா வாயிலாக தெளிவான படங்களை வழங்கும். முகப்பில் 5 மெகாபிக்ஸல் கேமரா f/2.2 அப்ரேச்சர் பெற்றுள்ளது. மற்றவை 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, பூளூடூத் 4.1, GPS போன்றவை உள்ளது.
ஸ்னாப்டீல் வழியாக கிடைக்கின்றது. சில்வர் ,கோல்டு மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.
- Display: 5-inch 720p Super AMOLED display
- Processor: 1.5 GHz Spreadtrum SC8830 along with 2GB of RAM
- Optics: 8-megapixel rear camera with dual LED flash
- Front camera: 5-megapixel front camera.
- Operating System : Android Marhsmallow 6.0 with touch Wiz UI.
- Storage: 16 GB storage with expandability option upto 128GB
- Battery Capacity: 2600mAh
- Connectivity: 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.0, GPS
- Price: ₹ 9890