Home Tech News Mobiles சாம்சங் கேலக்ஸி A80 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

சாம்சங் கேலக்ஸி A80 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

Samsung Galaxy A80

இந்தியாவில் சுழுலும் முறையிலான மூன்று கேமராவை கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி A80 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு ரூபாய் 47,990 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைலில் உள்ள கேமரா செல்ஃபி மற்றும் பிரைமரி ஆப்ஷனுக்கு என இரண்டு செயற்பாட்டை மேற்கொள்ளும்.

இந்தியாவில் கேலக்ஸி ஏ80 போன் விலை ரூ .47,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 22 முதல் ஜூலை 31 வரை முன்பதிவு தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 1 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும்.

கோஸ்ட் ஒயிட், பாண்டம் பிளாக் மற்றும் ஏஞ்சல் கோல்ட் என மூன்று நிறங்களை கொண்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களும் ஒரு முறை திரை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். சிட்டி வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஐந்து சதவீத கேஷ்பேக் சலுகையையும் வழங்குகிறது.

6.7 அங்குல சூப்பர் AMOLED திரையை பெற்று 1,080 x 2,400 பிக்சல் தீர்மானத்துடன் வந்துள்ள இந்த போனை இயக்க குவால்காம் நிறுவனத்தின் புதிய ஏஐ சிப்செட் மாடலான ஸ்னாப்டிராகன் 730G பிராசெஸர் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A80

கேமரா பிரிவில் இந்த போனில் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 3D டெப்த் ToF சென்சார் இடம்பெற்றுள்ளது. முன்புற செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பு தேவைகளையும் இதே கேமரா பூர்த்தி செய்யும். பயனர்கள் செல்பி படங்களை பிடிக்க வேண்டுமெனில் முன்புற கேமரா ஆப்ஷனை தேர்வு செய்தால் தானாகவே செல்பி சென்சார் கேமரா மேல் எழும்பி வந்து ரோட்டேட்டிங் விநாடிகளில் இந்த மெக்கானிக்கல் மாற்றம் நிகழும். 3700mAh திறன் பெற்ற பேட்டரி உடன் 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்றுள்ளது.

Exit mobile version