சாம்சங் கேலக்ஸி S8+ மொபைல் விபரம் வெளியானது

வருகின்ற பிப்ரவரி 26ந் தேதி பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் 2017 மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சாம்சங் கேலக்ஸி S8+ ஸ்மார்ட்போன் தொடர்பான முக்கிய விபரங்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S8+

உயர்தர கேலக்ஸி எஸ்8 பிளஸ் மொபைல் 6.2 அங்குல க்வாட் ஹெச்டி டிஸ்பிளேவுடன் இணைந்த AMOLED திரையை பெற்று விளங்கும் இந்த கருவியில் IP68 ரேட்டிங் வாயிலாக தூசு மற்றும் நீர்புகா அமைப்பினை கொண்டு விளங்குகின்றது.

மேலும் கேலக்ஸி எஸ்8+ ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள மற்றொரு முக்கிய அம்சமாக விளங்கும் iris scanner எனப்படும் கண்களின் கருவிழி வழியாக மொபைலை பாதுகாக்கும் அம்சத்தை பெற்றிருக்கும்.

இந்த கருவியில் 4ஜிபிரேம் இடம்பெற்று 64ஜிபி வரையிலான நினைவக திறனுடன் கூடுதலாக அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்திக்க்கொள்ளலாம். வயர்லெஸ் சார்ஜிங் அமைப்பினையும் பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8  பிளஸ் நுட்ப விபரம்

  •  Snapdragon 835 Processor
  • 4 GB RAM
  • ஆண்ட்ராய்ட் நௌகட் 7.0
  • 6.2 இன்ச் 1080p display
  • 64 GB internal storage
  • 12 MP பின்புற கேமரா
  • விலை – ரூ.68000 (6.2 inch)

Recommended For You