எம்ஐ மேக்ஸ் மொபைலுடன் எம்ஐயுஐ 8.0 ரோம் இயங்குதளத்தினை சர்வதேச அளவில் அறிமுகம் செய்துள்ளது. மிக அகலமான 6.44 இன்ச் (1080×1920 pixels) முழு ஹெச்டி திரையுடன் கார்னிங் கொரில்லா 3 கிளாஸ் பாதுகாப்புடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட MIUI 8 தளத்தில் செயல்படுகின்றது.
இரு வேரியண்ட்
1.8 GHz ஹெக்ஸா கோர் ஸ்னாப்டிராகன் 650 பிராசஸருடன் கூடிய 3GB ரேம் இடம்பெற்றுள்ளது. இதில் 32GB சேமிப்பு திறனை கொண்டுள்ளது.
ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸருடன் கூடிய 4GB ரேம் இடம்பெற்றுள்ளது.இதில் 128GB சேமிப்பு திறனை கொண்டுள்ளது.
Mi மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் பிரைமரி கேமராவில் தெளிவான புகைப்படங்களை வழங்கும் வகையில் எல்இடி ஃபிளாஷ் , 5 எலிமென்ட் லென்ஸ் மற்றும் PDAF போன்றவற்றை பெற்றுள்ளது. முன்பக்க கேமராவில் 5 மெகாபிக்சல் 85 டிகிரி கோண வைட் ஆங்கிளை பெற்றுள்ளது.
4G LTE உடன் VoLTE தொடர்பு , Bluetooth 4.1, GPS/ A-GPS , கைரேகை ஸ்கேனர் போன்றவற்றுடன் மிகச்சிறந்த பேட்டரி பேக்கப் 4850mAh பேட்டரியை பெற்றுள்ளது. ஹைபிரிட் சிம் ஸ்லாட்டினை பெற்றுள்ள சியோமி எம்ஐ மேக்ஸ் 128ஜிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி சேமிப்பு திறனை அதிகரிக்கலாம்.
சியோமி எம்ஐ மேக்ஸ் விலை
சியோமி எம்ஐ மேக்ஸ் 3GB ரேம் 32GB – ரூ.14,999
சியோமி எம்ஐ மேக்ஸ் 4GB ரேம் 128GB – ரூ.19,999
வருகின்ற ஜூலை 13 முதல் ஓபன் விற்பனை மூலம் சியோமி Mi மேக்ஸ் விற்பனைக்கு கிடைக்கும். மீ மேக்ஸ் கோல்டு , வெள்ளை மற்றும் டார்க் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.