இந்திய சந்தையில் சீன செல்போன் நிறுவனங்களின் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் சியோமி நிறுவனத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் விலை மொபைலான சியோமி ரெட்மி 4ஏ பற்றி அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ…!

சியோமி ரெட்மி 4ஏ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

 

 சியோமி ரெட்மி 4ஏ

  • ரூ.5999 விலையில் விற்பனைக்கு சியோமி ரெட்மி 4ஏ வந்துள்ளது.
  • 2ஜிபி ரேம் பெற்று 16 ஜிபி வரையிலான உள்ளடங்கிய சேமிப்பை பெற்றுள்ளது.
  •  இந்திய சந்தையில் ரெட்மி சீரிஸ் அமோக ஆதரவினை பெற்று விளங்குகின்றது.
  • வருகின்ற 23ந் தேதி எம்ஐ மற்றும் அமேசான் தளத்தில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.

இந்திய சந்தையில் ஜியோமி நிறுவனத்தின் விற்பனை செய்யப்படுகின்ற பிரபலமான ரெட்மி வரிசை மாடல்களில் பட்ஜெட் விலையில் வந்துள்ள இந்த புதிய ரெட்மி 4 ஏ ஸ்மார்ட்போன் கருவி அமோக ஆதரவினை பெறும் வாய்ப்புகள் உள்ளது.

டிசைன்

மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ள ரெட்மி 4ஏ கருவியானது பாலிகார்பனேட் பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு அற்புதமாக விளங்குகின்றது. இந்த மொபைல்போனின் கார்னர்கள் வட்ட வடிவ எட்ஜ்களை பெற்று விளங்குகின்றது.

131.5 கிராம் எடைகொண்டுள்ள ஜியோமின் ரெட்மி 4a கருவியின் நீளம் – 139.9 மிமீ
அகலம் – 70.4 மிமீ மற்றும் தடிமன் -8.5 மிமீ ஆகும்.

சியோமி ரெட்மி 4ஏ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

 

திரை

சிறப்பான கட்டமைப்பினை பெற்று விளங்குகின்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் 12.7cm அல்லது 5 அங்குல ஹெச்டி ஐபிஎஸ் திரை ஆப்ஷனை பெற்று 1280 x 720 பிக்சல் தீர்மானத்துடன் 296 PPI பிக்சல் அடர்த்தியை பெற்றதாக விளங்குகின்றது.

ரெட்மி 4ஏ ரேம் மற்றும் பிராசஸர்

1.4GHz  க்வாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 SoC உடன் 64 பிட் பிராசஸருடன்  2GB ரேம் உடன் இணைந்து செயல்படுகின்றது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 8  தளத்தில் ரெட்மி 4ஏ செயல்படுகின்றது.

கேமரா

போட்டோகிராபி பிரிவில் ஒற்றை எல்இடி பிளாஷ் பெற்ற 13 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன்   f/2.2 அப்ரேச்சர் பெற்று 5 எலமென்ட் லென்ஸ்களை பெற்றுள்ளது. செல்ஃபீ கவுன்டவுன் வசதியுடன் கூடிய 5 மெகாபிக்சல் கேமராவினை முன்பக்கத்தில் பெற்றுள்ளது.

சியோமி ரெட்மி 4ஏ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

 

மெமரி

உள்ளடங்கிய மெமரி ஆப்ஷனில் 16 ஜிபி பெற்றிருப்பதுடன் கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை சேமிப்பினை அதிகரிக்கலாம்.

பேட்டரி

3120mAh திறன் கொண்ட பேட்டரி ஆப்ஷனுடன் வந்துள்ள ரெட்மி 4ஏ கருவியின் ஸ்டேன் பை டைம் 7 நாட்கள் ஆகும். இந்த பேட்டரியை நீக்க இயாலது அதாவது நான் ரிமுவெபிள் பேட்டரியை பெற்றுள்ளது.

 

வண்ணங்கள்

ஜியோமின் ரெட்மி 4ஏ கருவியில் கிரே , கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு என 3 நிறங்களில் கிடைக்கின்றது.

 

மற்றவை

Wi-Fi, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ. ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ , VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போன்றவை பெற்றிருப்பதுடன் டூயல் சிம் ஆப்ஷனை மெம்ரி கார்டு தவிர்த்தும் அல்லது மெமரி கார்டுடன் ஒற்றை சிம் ஆப்ஷனை வழங்கும் ஹைபிரிட் சிம் சிலாட்டினை பெற்றுள்ளது.

சியோமி ரெட்மி 4ஏ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

சியோமி ரெட்மி 4A விலை

பட்ஜெட் ரகத்தில் அமைந்துள்ள சியோமி ரெட்மி 4A மொபைல் விலை ரூ.5999 மட்டுமே..

 

எங்கே வாங்கலாம்

முதற்கட்டமாக வருகின்ற 23ந் தேதி பகல் 12 மணிக்கு ஆன்லைனில் கிடைக்கின்ற இந்த ஸ்மார்ட்போன் ஜியோமி நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இந்திய இணையதளம் mi.com மற்றும் அமேசான் தளத்திலும் வாங்கலாம்.

Redmi 4A in tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here