2016 ஆம் ஆண்டில் விற்பனையில் உள்ள மிகச்சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான சிறப்பு மொபைல்களின் பட்டியலை தெரிந்துகொள்ளலாம்.

சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கலாமா - 2016

1. சாம்சங் கேலக்சி S7 எட்ஜ்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் மொபைல்களில் டாப் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள சாம்சங் கேலக்சி எஸ்7 எட்ஜ் மொபைல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உலகில் முதலிடத்தினை பெற்றுள்ளது.

 • இயங்குதளம் – ஆண்ட்ராய்டு  6.0 மார்ஷ்மெல்லோ
 • சிபியூ – ஸ்னாப்டிராக்ன் 820
 • திரை – 5.5 இன்ச் சூப்பர் AMOLED திரை
 • ரேம் – 4GB 
 • கேமரா – 12MP (Primary) 
 • முன்பக்க கேமரா – 5MP
 • சேமிப்பு – 32GB  (MicroSD – upto 200GB)
 • பேட்டரி – 3600 mAh
சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கலாமா - 2016

மிக தெளிவான ஹெச்டி திரையுடன் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய எஸ் 7 எட்ஜ் மொபைலில் மிக தெளிவான படங்களை வழங்கவல்ல அதிநவீன வசதிகளை  கொண்ட கேமரா பெற்றுள்ளது. நீர் மற்றும் தூசுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். விலை சற்று கூடுதலாக இருந்தாலும் சிறந்த ஆண்ட்ராய்டு மொபைல் போன் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்சி எஸ்7 எட்ஜ் விலை ரூ. 56,900

2. சாம்சங் கேலக்சி S7

கேலக்சி சீரிஸ் மொபைல்களில் மற்றொரு மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள சாம்சங் கேலக்சி எஸ்7 மொபைல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உலகில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. எஸ்7  எட்ஜ் வருகையால் சற்று பின் தங்கியுள்ளது.

 • இயங்குதளம் – ஆண்ட்ராய்டு  6.0 மார்ஷ்மெல்லோ
 • சிபியூ – ஸ்னாப்டிராக்ன் 820
 • திரை – 5.1 இன்ச் சூப்பர் AMOLED திரை
 • ரேம் – 4GB 
 • கேமரா – 12MP (Primary) 
 • முன்பக்க கேமரா – 5MP
 • சேமிப்பு – 32GB  (MicroSD – upto 200GB)
 • பேட்டரி – 3000 mAh

சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கலாமா - 2016

மிக தெளிவான ஹெச்டி திரையுடன் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய எஸ் 7 மொபைலில் மிக தெளிவான படங்களை வழங்கவல்ல அதிநவீன வசதிகளை  கொண்ட கேமரா பெற்றுள்ளது. நீர் மற்றும் தூசுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். விலை சற்று கூடுதலாக இருந்தாலும் சிறந்த ஆண்ட்ராய்டு மொபைல் போன் பட்டியலில் இடம்பிடித்துள்ளது..

சாம்சங் கேலக்சி எஸ்7 விலை ரூ. 48,900

3. ஹெச்டிசி 10

மிகச்சிறப்பான செயல்திறனை கொண்டுள்ள ஹெச்டிசி 10 ஸ்மார்ட்போன் சிறப்பான கேமராவினை வெளிப்படுத்துவதில் சற்று தயக்கமே காட்டுகின்றது. மற்றபடி சிறப்பான மொபைல்போன் ஆகும்.

 • இயங்குதளம் – ஆண்ட்ராய்டு  6.0 மார்ஷ்மெல்லோ
 • சிபியூ – ஸ்னாப்டிராக்ன் 820
 • திரை – 5.2 இன்ச் திரை
 • ரேம் – 4GB 
 • கேமரா – 12MP (Primary) 
 • முன்பக்க கேமரா – 5MP
 • சேமிப்பு – 32GB  (MicroSD – upto 2TB)
 • பேட்டரி – 3000 mAh
சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கலாமா - 2016
சிறப்பான முறையில் இயங்கும் ஹெச்டிசி 10 மொபைல் கேலக்சி எஸ் 7 மொபைலுக்கு இணையான கேமரா தெளிவினை பெறவில்லை. மேலும் சற்று விலையும் கூடுதலாக அமைந்துள்ளது.
ஹெச்டிசி 10 மொபைல் விலை ரூ. 47,990

4. ஒன் ப்ளஸ் 3

ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் மிக சிறப்பான இடத்தினை பிடித்துள்ள ஒன் ப்ளஸ் 3 மொபைல் போனில் 6GB ரேம் வாயிலாக மிக வேகமாக இயங்கும் வகையிலான மொபைலாக விளங்குகின்றது.
 • இயங்குதளம் – ஆண்ட்ராய்டு  6.0 மார்ஷ்மெல்லோ
 • சிபியூ – ஸ்னாப்டிராக்ன் 820
 • திரை – 5.5 இன்ச் சூப்பர் AMOLED திரை
 • ரேம் – 6GB 
 • கேமரா – 16MP (Primary) 
 • முன்பக்க கேமரா – 8MP
 • சேமிப்பு – 64GB  ( No microSD slot )
 • பேட்டரி – 3000 mAh
சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கலாமா - 2016
மற்ற போட்டியாளர்களை விட சவாலான குறைந்த விலையில் அமைந்திருப்பது மிகப்பெரிய பலமாக ஒன் பிளஸ் 3 மொபைல்போனுக்கு சாதகமான அம்சமாக இருக்கின்றது. நல்ல தெளிவான படங்கள் , சிறப்பான டிசைன் போன்றவை முக்கிய அம்சமாகும்.
ஒன் ப்ளஸ் 3 மொபைல் விலை ரூ. 27,999

5. சோனி எக்ஸ்பீரியா Z5

சோனி நிறுவனத்தின் மிகச்சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக விளங்கும். எக்ஸ்பீரியா இசட் 5 பிடித்திருக்கும் இடம் 5 ஆகும்.

 • இயங்குதளம் – 5.1 லாலிபாப் மேம்பாடு ஆண்ட்ராய்டு  6.0 மார்ஷ்மெல்லோ
 • சிபியூ – ஸ்னாப்டிராக்ன் 810
 • திரை – 5.5 இன்ச் திரை
 • ரேம் – 3GB 
 • கேமரா – 23MP (Primary) 
 • முன்பக்க கேமரா – 5.1MP
 • சேமிப்பு – 64GB  ( microSD – upto 200GB )
 • பேட்டரி – 3430 mAh
சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கலாமா - 2016

சிறப்பான பேட்டரி சேமிப்பை கொண்ட மாடலாக விளங்கும் எக்ஸ்பீரியா இசட் 5 மொபைல் மிக தெளிவாக படங்களை வழங்குகின்றது.

சோனி எக்ஸ்பீரியா Z5 – ரூ.52,840

கேட்ஜெட்ஸ் தமிழன் பரிந்துரை கேலக்சி எஸ் 7 எட்ஜ் மற்றும் ஒன் ப்ளஸ் 3 ஆகும்.

உங்கள் கருத்து என்ன மறக்காமல் கீழுள்ள கமென்ட் பாக்சில் சொல்லுங்க மற்றவர்களுக்கு உதவும்.. தொடர்ந்து மொபைல் செய்திகளை வாசிக்க கேட்ஜெட்ஸ் தமிழன் பேஸ்புக் பக்கத்தில் தொடரவும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here