ஜியோ லைஃப் C459 ஸ்மார்ட்போன் விலை ரூ.4,699

ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவின் லைஃப் பிராண்டில் புதிதாக லைஃப் C459 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் பெற்றதாக ரூ.4699 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

Lyf C459 ஸ்மார்ட்போன்

சமீபத்தில் ஜியோ வெளியிட்ட 4ஜி ஆதரவு பெற்ற ஜியோபோன் மொபைலில் இடம்பெற உள்ள அதே குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பெற்ற மொபைலாக லைஃப் சி459 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

லைஃப் பிராண்டின் வின்ட் சீரிஸ் கீழ் இந்த ஸ்மார்ட்போனில் 4.5 அங்குல FWVGA டிஸ்பிளே பெற்று 2D ஆசாஹி பாதுகாப்பு கிளாஸ் பெற்றிருப்பதுடன் மெட்டாலிக் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு மற்றும் நீலம் வண்ணத்தில் கிடைக்கின்ற சி459 வலது புறத்தில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பிராசஸர் & ரேம்

லைஃப் சி459 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் தொடக்கநிலை 1.3GHz குவாட் கோர் பிராசஸருடன் கூடிய ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் மூலம் 1ஜிபி ரேம் வாயிலாக இயக்கப்பட்டு 8 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் கூடுதலாக 128ஜிபி வரை நீடிக்கும் திறன் பெற்ற மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

LYF C459 கேமரா துறையில் பின்புறத்தில் 6X டிஜிட்டல் ஜூம் , எல்இடி ஃபிளாஷ் பெற்ற 5 மெகாபிக்சல் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 2 மெகாபிக்சல் எதிர்கொள்ளும் கேமரா இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த மொபைலை இயக்குவதற்கு 2,000mAh திறன் பெற்ற பேட்டரி பயன்படுத்தப்படுகின்றது.

மற்றவை

இரட்டை சிம் கார்டு ஆதரவு, 4G LTE , VoLTE ஆதரவு, வை-ஃபை 802.11 b/g/n, புளூடூத் v4.0 மற்றும் யூஎஸ்பி ஓடிஜி ஆதரவினை கொண்டதாக இந்த மொபைல் உள்ளது.

விலை

லைஃப் இணையதளம் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் கிடைக்க உள்ள லைஃப் சி459 விலை ரூ.4,699 மட்டுமே.

தொடர்ந்து மொபைல் செய்திகளை படிக்க எங்களை பேஸ்புக்கில் தொடர fb.com/gadgetstamilan

Recommended For You