இந்திய சந்தையில் சீனாவின் மற்றொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான டெக்னோ மொபைல் நிறுவனம் 5 ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் டெக்னோ மொபைல் அறிமுகம்

டெக்னோ மொபைல்

  • சீனாவை தலைமையிடமாக டெக்னோ மொபைல் செயல்படுகின்றது.
  • ரூ.7990 முதல் ரூ.14,990 வரையிலான விலையில் 5 ஸ்மார்ட்போன்கள் வந்துள்ளது.
  • டெக்னோ ஐ7 மொபைல் விலை ரூபாய் 14,990 ஆகும்.

இந்தியாவில் டெக்னோ மொபைல் அறிமுகம்

டிரான்ஸன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஐடெல், இன்ஃபினிஎக்ஸ் போன்ற பிராண்டுகளுடன்  டெக்னோ மொபைல் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

இந்தியாவில் மே மாதம் முதல் நாடு முழுவதும் டெக்னோ i7 மொபைல் கிடைக்கும்.மற்ற மொபைல்களான டெக்னோ i3 , i3 Pro, i5, i5 Pro போன்றவை இன்று முதல் பஞ்சாப் மற்றும் வெள்ளி, வார இறுதியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

இந்தியாவில் டெக்னோ மொபைல் அறிமுகம்

டெக்னோ i7 மொபைல்

மெட்டாலிக் பாடியை பெற்றுள்ள ஐ7 ஸ்மார்ட்போனில் 5.5 அங்குல முழு ஹெச்டி 1080×1920 பிக்சல் தீர்மானம் IPS திரையுடன் 4GB ரேம் ஆப்ஷனை கொண்டு 32GB வரை உள்ளடங்கிய மெமரி பெற்று மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக கூடுதல் சேமிப்பை நீட்டிக்கலாம்.

டெக்னோவின் HiOS எனும் பெயர் கொண்ட ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஐ7 ஸ்மார்ட்போனில் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள பிரத்யேக இரவு நேர 16 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா எல்இடி ஃபிளாஷ் வசதியை பெற்றுள்ளது. பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

கைரேகை ஸ்கேனர் ,  4ஜி VoLTE, 3ஜி, வை-ஃபை, ப்ளூடூத்  மற்றும் ஜிபிஎஸ் போன்ற துனை விருப்பங்களுடன் ராக்கெட் சார்ஜிங் எனப்படுகின்ற விரைவாக சார்ஜ் செய்யும் வசதியுடன் கூடிய 4000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது.

டெக்னோ i5

டெக்னோ ஐ5 ஸ்மார்ட்போனில் 5.5 அங்குல ஹெச்டி IPS திரையுடன் பெற்று 2GB ரேம் ஆப்ஷனை கொண்டு 16GB வரை உள்ளடங்கிய மெமரி பெற்றுள்ளது.

இந்தியாவில் டெக்னோ மொபைல் அறிமுகம்

இதில் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் பின்புறத்தில் 13மெகாபிக்சல் கேமரா இடம்பெற்று கைரேகை ஸ்கேனர் ,  4ஜி VoLTE, ViLTE 3ஜி, வை-ஃபை, ப்ளூடூத்  மற்றும் ஜிபிஎஸ் போன்ற துனை விருப்பங்களுடன் ராக்கெட் சார்ஜிங் எனப்படுகின்ற விரைவாக சார்ஜ் செய்யும் வசதியுடன் கூடிய 4000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது.

டெக்னோ i5 ப்ரோ

ஐ5 மொபைல் ஆப்ஷன்களுடன் வித்தியாசப்படும் வகையில் 3ஜிபி ரேம் ஆப்ஷனை பெற்று 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை கொண்டுள்ளது.

டெக்னோ i3

டெக்னோ ஐ3 ஸ்மார்ட்போனில் 5 அங்குல ஹெச்டி IPS திரையுடன் மீடியாடெக் பிராசஸர் பெற்று 2GB ரேம் ஆப்ஷனை கொண்டு 16GB வரை உள்ளடங்கிய மெமரி பெற்றுள்ளது.

இந்தியாவில் டெக்னோ மொபைல் அறிமுகம்

இதில் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்று  4ஜி VoLTE, ViLTE 3ஜி, வை-ஃபை, ப்ளூடூத்  மற்றும் ஜிபிஎஸ் போன்ற துனை விருப்பங்களுடன் 3050mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது.

டெக்னோ i3 ப்ரோ

ஐ5 மொபைல் ஆப்ஷன்களுடன் வித்தியாசப்படும் வகையில் 3ஜிபி ரேம் ஆப்ஷனை பெற்று  கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டுள்ளது.

டெக்னோ மொபைல் விலை பட்டியல்
  • டெக்னோ i3 ரூபாய் 7,990
  • டெக்னோ i3 Pro ரூபாய் 9,990
  • டெக்னோ i5 ரூபாய் 11,490
  • டெக்னோ i5 Pro ரூபாய் 12,990
  • டெக்னோ i7 ரூபாய் 14,990

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here