நோக்கியா 106 (2018) மொபைல் விற்பனைக்கு வெளியானது

இந்திய மொபைல் போன் சந்தையில் , 4ஜி ஆதிக்கம் அதிரித்து வரும் நிலையில் 2ஜி ஆதரவை பெற்ற, புதிய நோக்கியா 106 (2018) ஃப்யூச்சர் போன் ரக மாடல் ரூ.1,415 விலையில் விற்பனைக்கு பிளிப்கார்டில் கிடைக்கின்றது. மேலும் அமேசான் இந்தியாவிலும் கிடைக்கின்றது.

2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 106 வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 106 (2018) மாடலில் புதிதாக கிரே நிறம் இணைக்கப்பட்டு கூடுதலாக கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது. இந்த மொபைல் போன் ஒற்றை சிம் கார்டு ஆதரவை கொண்டதாகும்.

 

புதிய Nokia 106 (2018) மாடல் மிக தெளிவான 1.8-inch QQVGA TFT திரையுடன், பாலிகார்பனேடட் பாடி அம்சத்தை கொண்ட இந்த மொபைலில் மீடியாடெக் MT6261D சிப்செட் உடன் 4 எம்பி ரேம் மற்றும் 4 எம்பி உள்ளடக்க மெமரி கொண்டு கூடுதலாக சேமிப்பினை நீட்டிக்க 32 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நோக்கியா 106 போனில் 800mAh திறன் பெற்ற பேட்டரியுடன் எல்இடி ஃபிளாஷ் லைட், பன்பலை ரேடியோ, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக் பெற்று விளங்குகின்றது. மேலும் ப்ரீலோடு கேம்ஸ் ஸ்னேக் கேம், டேஞ்சர் டேஸ், நிட்ரோ ரேசிங் போன்றவற்றை பெற்றுள்ளது.