நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

மே மாதம் சீனாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா  X6 ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனைக்க்கு வரக்கூடும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே நோக்கியா எக்ஸ்6 பற்றி அறிந்து கொள்ளலாம்.

நோக்கியா X6 ஸ்மார்ட்போன்

நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ் 6 சர்வதேச அளவில் விற்பனை அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சமீபத்தல் ஹெச்எம்டி குளோபல் தலைமை ப்ராடெக்ட் அதிகாரி ஜூஹூ சார்விகாஸ் , தனது ட்வீட்டர் பக்கத்தில் எக்ஸ்6 சர்வதேச அறிமுகம் குறித்து எழுப்பிய வாக்குப்பதிவு டிவிட்க்கு அதிகப்படியான ஆதரவை பெற்றதை தொடர்ந்து , பல்வேறு நாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நோக்கியா சர்வதேச இணையதளத்தில் இந்த மொபைல் போன் படம் வெளியாகி பின்பு நீக்கப்பட்டது.

இந்தியாவின் நோக்கியா இணையதளத்தில் செயல்பட்டு வரும் பக்கத்தில் நோக்கியா எக்ஸ்6 தொடர்பான ஆதரவு பக்கத்தை வெளியிட்டு தவறுதலாக நீக்கியுள்ளது. எனவே இந்தியாவில் எக்ஸ்6 வருகை உறுதியாகியுள்ளது. ஆனால் அதிகார்வப்பூர்வாக ஹெச்எம்டி குளோபல் அறிமுகம் குறித்து அறிக்கை வெளியிடவில்லை.

நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

டிசைன் & டிஸ்பிளே

நோக்கியா எக்ஸ்6 மொபைல் போன்  5.8 அங்குல FHD+ (1080 x 2280 பிக்சல்ஸ்) அம்சத்தை பெற்ற 19:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக நாட்ச் டிசைன் அம்சத்தை பெற்றதாக அமைந்துள்ள இந்த போன் மெட்டல் ஃபிரேம் கொண்டு பின்புறத்தில் கிளாசினால் பெற்ற பேக் பேனலை கொண்டுள்ளது. செங்குத்தான இரட்டை கேமரா மற்றும் பின்புறத்தில் கைரேகை சென்சார் ஆகியவற்றை பெற்று கருப்பு, சில்வர், மற்றும் நீலம் ஆகிய நிறங்களை கொண்டுள்ளது.

பிராசெஸர் & ரேம்

சீனாவில் வெளியான எக்ஸ்6 மொபைலில் மொத்தம் இரு விதமான ரேம் மாறுபாடு மற்றும் உள்ளீட்டு சேமிப்பை பெற்று விளங்குகின்றது.  குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள மொபைலில் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என இருவிதமான ரேம் பெற்று 32GB/64GB என மொத்தமாக இரண்டு வேரியண்டை கொண்டுள்ளது. கூடுதலாக சேமிப்பு திறனை 256GB அதிகரிக்க மைக்ரோ எஸ்டி காரினை பொருத்திக் கொள்ளலாம்.

நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

கேமரா

செங்குத்தாக வழங்கப்பட்டுள்ள இரட்டை கேமரா செட்டப்பில், 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா f/2.0 மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா f/2.2 பெற்று விளங்குவதுடன் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை பின்பற்றி நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் க்விக் சார்ஜ் 3.0 கொண்டு செயல்படுகின்ற நோக்கியா எக்ஸ்6 மொபைல் 3,060 mAh பேட்டரி கொண்டுள்ளது.

மற்றவை

ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார், உட்பட USB Type-C port, Bluetooth, GPS மற்றும் Wi-Fi,  3.5mm ஆடியோ ஜாக் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

விலை & வருகை

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலின் விலை விபரத்துக்கு ஈடாக அமைந்திருக்கலாம்.

சீனாவில் நோக்கியா எக்ஸ் 6 4GB/32GB  CNY1,299 (ரூ.13,800) மற்றும் 4GB/64GB வேரியன்ட் விலை CNY1,449 (ரூ.15,980), மேலும் 6GB/64GB வேரியன்ட் CNY1,699 (ரூ.18,000) ஆகும்.