பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் மெர்குரி மொபைல் என அறியப்பட்ட மாடல் பிளாக்பெர்ரி கீஒன் என்ற பெயரில் $549 (ரூ.38,600) விலையில் 2017 சர்வதேச மொபைல் காங்கிரஸ் கருத்தரங்கில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் - MWC 2017

பிளாக்பெர்ரி கீஒன்

பர்சிலோனாவில் தொடங்கி உள்ள 2017 மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் கருத்தரங்கில் வெளியிடப்பட்டுள்ள பிளாக்பெர்ரி கீஒன் கல்வேறு விதமான சிறப்பு வசதிகளை கொண்ட மொபைலாக வழக்கம்போல பிளாக்பெர்ரி நிறுவனத்தின் கீபோர்டுகளை பெற்று மிகவும் ஸ்டைலிசாக விளங்குகின்றது. தற்பொழுது பிளாக்பெர்ரி மொபைல்களை டிசிஎல் நிறுவனம் தயாரிக்கின்றது.

பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் - MWC 2017

திரை மற்றும் பிராசஸர்

4.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் வந்துள்ள இந்த கருவி 1080×1620 பிக்சலை பெற்று  க்வால்காம் ஸ்னாப்டிராக் 625 SoC உடன் செயல்படுகின்ற 3GB ரேம் பெற்று  32GB வரையிலான சேமிப்பினை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 2TB வரை விரிவாக்க இயலும்.

கேமரா

மிக சிறப்பான 4K வீடியோவினை பதிவு செய்யும் வகையிலான கேமராவை பெற்று விளங்குகின்ற கீஒன் மொபைல் 12 மெகாபிக்சல் பின்புற கேமராவில் சோனி IMX378 சென்சாருடன் இணைந்த டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ் போன்றவை பெற்றுள்ளது.

முன்புறத்தில் மிக சிறப்பான செல்ஃபீ படங்களை வெளிப்படுத்தும் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

மிகவேகமாக சார் ஏறும் குயீக் சார்ஜ் 3.0 வினை பெற்றுள்ளதால் 50 சதவீத சார்ஜ் 36 நிமிடங்களில் ஏறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3505mAh பேட்டரி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் - MWC 2017

மற்றவை

கீபோர்டுடன் இணைந்த கைரேகை ஸ்கேனர் , ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற கீஒன் ஸ்மார்ட்போனில் Wi-Fi 802.11/b/g/n/ac, பூளூடுத் 4.2, ஜிபிஎஸ், 4G LTE, VoLTE, மற்றும் என்எஃப்சி போன்றவை இடபெற்றுள்ளது.

பிளாக்பெர்ரி கீஒன் விலை

வருகின்ற ஏப்ரல் 2017 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் விலை $549 (ரூ.38,600) ஆகும்.

பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் - MWC 2017

மேலும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் செய்திகளை உடனுக்குடன் எக்ஸ்குளூசிவாக படிக்க இணைந்திருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்துடன்…….

BlackBerry KeyOne Mobile Photos 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here