இந்தியாவில் பேனாசோனிக் நிறுவனம் புதிய பேனாசோனிக் P75 மொபைல்போனை ரூ. 5990 விலையில் மிகச்சிறப்பான பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பேனாசோனிக் பி75 மொபைல் ஆன்லைன் மற்றும்ஆஃப்லைன் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் 1 ஜிபி ரேம் , 8 மெகாபிக்சல் கேமரா போன்றவற்றுடன் அதிகபட்ச பேட்டரி திறனை 5000mAh பெற்றுள்ளது.

மேலும் படிக்க ; ஏலியன் பூமியை தாக்குமா ?

பேனாசோனிக் P75 போனில் 5 இன்ச் ஹெச்டி திரையுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 5.1 லாலிபாப் வாயிலாக 1.3 GHz குவாட்கோர் பிராசஸருடன் இணைந்த 1 ஜிபி ரேம் கொண்டுள்ள பி75 மொபைலில் 8 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா போன்றவற்றுடன் 8 ஜிபி இன்ட்ரனல் மெம்மரி மற்றும் 32ஜிபி வரையில் அதிகரிக்கும் வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த இயலும்.

இரு சிம் ஸ்லாட்களை கொண்டுள்ள பி75யில் ஒரு ஸ்லாட்டில் 3ஜி மற்றொரு ஸ்லாட்டில் 2ஜி சிம் கார்டினை பயன்படுத்த இயலும். மேலும் வை-ஃபை , பூளூடூத் , ஜிபிஎஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

பேனாசோனிக் P75 விலை ரூ.5,990

பேனாசோனிக் P75 மொபைல் வாங்க ; Exclusive Snapdeal P75