இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2 மொபைல்போன் ரூ. 7,499 விலையில் 4G LTE , 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே , 13MP ரியர் கேமரா மற்றும் 2GB ரேம் பெற்று மிக சவாலான விலையில் வந்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2 மொபைல் அறிமுகம்

கேன்வாஸ் அமேஸ் 2 மொபைல் போனில் 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவினை பெற்று கீறல்களை தடுக்கும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பெற்றுள்ளது. இதில் 1.4GHz ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் பிராசெஸருடன் 2GB ரேம் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படும் அமேஸ் 2 மொபைல்போனில் 16GB இன்ட்ரனல் மெம்மரி மற்றும் 64GB வரையிலான கூடுதல் மெம்மரியை மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்தி பெறலாம்.

13MP ரியர் கேமரா டியூவல் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 5MP  முன்பக்க கேமராவினை பெற்றுள்ளது. மேலும் 4G LTE, 3G, GPRS/ EDGE, Wi-Fi , பூளூடூத் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போன்றவற்றுடன் 2500mAh பேட்டரியை பெற்றுள்ளது.

கேன்வாஸ் அமேஸ் 2 முக்கிய அம்சங்கள்

  • ரூ.7499 விலையில் 13MP ரியர் கேமரா 
  • 4G LTE  தொடர்பு
  • 2GB ரேம்
  • 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே
  • 16GB internal ( 64GB microSD)
ஃபிளிப்கார்ட் வழியாக எக்ஸகுளூசிவாக விற்பனை செய்யப்பட உள்ளது.
ஃபிளிப்கார்ட் தளத்தில் வாங்க ;  மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2 மொபைல் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here