மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 ப்ளஸ் விற்பனைக்கு அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.7,999 ஆகும். மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 2.5 மில்லியன் கேன்வாஸ் யூனைட் மொபைல்களை விற்பனை செய்துள்ளது.

வெள்ளை ,சில்வர் மற்றும் கிரே என மூன்று வண்ணங்களில் வந்துள்ள கேன்வாஸ் யூனைட் 4 ப்ளஸ் மொபைலில் கைரேகை ஸ்கேனர் மற்றும் இன்டஸ் ஓஎஸ் 2.0 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

மெட்டால் பாடியுடன்க கூடிய 5 இன்ச் முழு ஹெச்டி திரையுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய 1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் 2ஜிபி ரேம் பெற்றுள்ளது. 16 ஜிபி இன்டர்னல் சேமிப்பு திறனுடன் 64 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக சேமிப்பு வசதி பெறலாம்.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா தளத்தை அடிப்படையாக கொண்ட இன்டஸ் ஓஎஸ் 2.0 இயங்குதளத்தின் வாயிலாக எண்ணற்ற வசதிகளுடன் ஆப் பஜார் , 12 இந்திய மொழிகள் போன்றவற்றுடன் 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா பெற்று விளங்குகின்றது.

4ஜி ,3ஜி ஆதரவு , வை-ஃபை , பூளூடூத் , போன்ற வசதிகளுடன் கைரேகை ஸ்கேனர் ஹோம் பட்டனில் சேர்க்கப்பட்டுள்ளது. ரூ.7,999 விலையில்   மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கும். 

Recommended For You