லெனோவா நிறுவனத்தின் டெக் வோல்டு 2016 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் ஃபோர்ஸ் மொமைல்கள் மற்றும் மோட்டோ மாட்ஸ் போன்றவை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மிகச்சிறப்பான செயல்திறனுடன் பல வீன வசதிகளை பெற்றுள்ள மோட்டோ இசட் வகை மொபைல்போன்களில் மோட்டோ மாட்ஸ் எனப்படும் செமி மாடுலர் வசதிகளையும் வழங்குகின்றது.

5.5 இன்ச் டிஸ்பிளே ஹெச்டி டிஸ்பிளே வசதியுடன் 2.15 GHz குவாட்-கோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 820 பிராசஸருடன் இணைந்த 4GB ரேம் பெற்றுள்ளது. 32GB மற்றும் 64GB என இருவிதமான இன்ட்ரனல் ஸ்டோரேஜ் வசதியுடன் பெற்றுள்ள மோட்டோ Z மொபைல்போனில் 2TB வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்த இயலும்.

மேலும் முழுமையாக படிக்க ; மோட்டோ இசட் விபரம் மற்றும் மோட்டோ மாட்ஸ்

தற்பொழுது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ இசட் வரிசை மொபைல்களுடன் வழங்கப்படும் ஜெபிஎல் சவூண்ட் பூஸ்டர் ,  இன்ஸ்டா ஷேர் புராஜெக்ட்ர் மற்றும் பவர்  பேக் போன்ற மோட்டோ மாட்ஸ்களும் $50 முதல் $200 விலையில் கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆன்லைன் வழியாக விற்பனையை தொடங்கினாலும் ஆஃப்லைன் வழியாகவும் விற்பனை செய்யவும் லென்னோவா திட்டமிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் லெனோவா நிறுவனம் 9 சதவீத சந்தை மதிப்புடன் $1 பில்லியன் மதிப்பிற்கு லாபத்தினை அடைந்துள்ளது. இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 மில்லியன் ஸ்மார்போன் உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மொபைல் பார்க்க ; Best Selling mobiles in India

வரும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களுக்குள் மோட்டோ இசட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.