லெனோவா டெக் வோர்ல்ட் 2016யில் மோட்டோ இசட் , மோட்டோ இசட் ஃபோர்ஸ் மொபைல்கள் மற்றும் மோட்டோ மாட்ஸ் போன்றவற்றை லெனோவா அறிமுகம் செய்துள்ளது. லெனோவா குழுமத்தின் அங்கமாக மோட்ரோலா செயல்படுகின்றது.

மோட்டோ இசட் , மோட்டோ இசட் ஃபோர்ஸ் மற்றும் மோட்டோ மாட்ஸ் அறிமுகம்

மோட்டோ Z மற்றும் மோட்டோ Z Force என இரு மொபைல்களில் மிகச்சிறப்பான பல நவீன வசதிகளுடன் அசத்தலாக செமி மாடுலர் போனாக வந்துள்ளது. இரு மொபைல்களும் பெரும்பாலான நுட்ப விபரங்களில் ஒன்றாகவே இருந்தாலும் சில மாற்றங்களையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க ; ரூ.5000 விலையில் சிறந்த 10 மொபைல்கள்

மோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் ஃபோர்ஸ் சிறப்பம்சங்கள்

டிசைன் மற்றும் டிஸ்பிளே

மோட்டோ இசட் சீரிஸ் மொபைல்கள் மிகவும் தட்டையான வடிவமைப்பு குறைந்த எடையில் மெட்டல் பாடியை கொண்ட மாடல்களாகும். அதேபோலவே இசட் மற்றும் இசட் ஃபோர்ஸ் அமைந்துள்ளது.  இருமொபைல்களும் 5.5 இன்ச் டிஸ்பிளே என தோற்றத்தில் ஒத்துபோனாலும்   இசட் ஃபோர்ஸ் மாடலில் சேட்டர்புரூஃப் உள்ளது.

Moto Z
Moto Z

பிராசஸர்

மோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் ஃபோர்ஸ் இரு மொபைல்களிலும்  2.15 GHz குவாட்-கோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 820 பிராசஸர் கொண்டு இயங்குகின்றது.

ரேம்

இரு மொபைல்களிலும் 4GB DDR4 லோ-பவர் ரேம் பெற்றுள்ளது. லோ-பவர் ரேம் பேட்டரி ஆற்றலை சேமிக்கும்.

மெம்மரி வசதி

இசட் மற்றும் இசட் ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனில் 32GB மற்றும் 64GB என இருவிதமான இன்ட்ரனல் ஸ்டோரேஜ் வசதியுடன் 2TB மெம்மரி வரையிலான எக்ஸ்ட்ரனல் மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த இயலும்.

Moto Z Force
Moto Z Force

பேட்டரி

மோட்டோ இசட் மொபைல் 2600mAh பேட்டரி வேகமாக சார்ஜ் ஏற ட்ர்போ சார்ஜ் வசதியுடன் கிடைக்கும். மோட்டோ இசட் ஃபோர்ஸ் மொபைல் 3500mAh பேட்டரி ட்ர்போ சார்ஜ் வசதியுடன் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் வசதியை பெற்றுள்ளதால் மற்ற மோட்டோ மாடல்களை விட மிக வேகமான சார்ஜிங் மொபைலாக விளங்கும். அதாவது 15 முதல் 20 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் ஆகிவிடும்.

மேலும் படிக்க ; லெனோவா பேப் 2 புரோ டேங்கோ மொபைல்

கேமரா

இரு மொபைல்களிலும் ஒரு விதமான கேமரா ஆப்ஸ் செயல்பாடுகளை  கொண்டிருந்தாலும் அதாவது பேஸ் டிடெக்‌ஷன் ஆட்டோ ஃபோகஸ் , லேசர் ஆட்டோஃபோகஸ் போன்வறை இருந்தாலும் மெகாபிக்ஸல் வித்தியாசப்படுகின்றது.

 மோட்டோ இசட் மொபைலில் 13MP பிரைமரி கேமராவினை பெற்றுள்ளது.

 மோட்டோ இசட் ஃபோர்ஸ் மொபைலில் 21MP பிரைமரி கேமராவினை பெற்றுள்ளது.

  மேலும் முன்புறத்தில் 5MP கேமராவை இரு மாடல்களும் பெற்று விளங்குகின்றது.
மோட்டோ இசட் , மோட்டோ இசட் ஃபோர்ஸ் மற்றும் மோட்டோ மாட்ஸ் அறிமுகம்
ஆண்ட்ராய்டு 
6.0.1 மார்ஷ்மெல்லோ ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை கொண்டு இரு மாடல்களும் செயல்படுகின்றது.
தலைசிறந்த மொபைல் வாங்க ; Best Selling mobiles In India 

மோட்டோ மாட்ஸ்

மோட்டோ இசட் சீரிஸ் மொபைல்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள JBL சவுண்ட் பூஸ்ட் , மோட்டோ இன்ஸ்டா ஷேர் புராஜெக்ட்ர் மற்றும் பவர் பேக் என மூன்று விதமான மோட்டோ மாட்ஸ் பெற்றுள்ளது.
மோட்டோ இசட் , மோட்டோ இசட் ஃபோர்ஸ் மற்றும் மோட்டோ மாட்ஸ் அறிமுகம்
மோட்டோ மாட்ஸ் இணைப்பதற்காக 16 டாட்ஸ் கொண்ட பேக் கவரினை மோட்டோ இசட் வகை போன்கள் பெற்றுள்ளது. இதில் பொருத்தப்பட்டடுள்ள காந்தவிசையின் காரணமாக எடுத்து பொருத்தினால் தானகவே இணைந்துகொள்ளும்.
 1. JBL சவுண்ட்பூஸ்ட் மிகச்சிறப்பான ஆடியோ அனுபவத்தினை வழங்கவல்லதாகும்.
2. மோட்டோ இன்ஸ்டா ஷேர் புராஜெக்ட்ர் 70 இன்ச் புராஜெக்டர் அனுபவத்தினை வழங்கும்.
3. பவர் பேக் 22 மணி நேரம் பேட்டரி ஆயுளை நீட்டிக்க உதவும்.
மோட்டோ இசட் , மோட்டோ இசட் ஃபோர்ஸ் மொபைல்களுக்கு பலதரப்பட்ட பாடி கவர்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மரபேனல் , லெதர் மற்றும் ஃபேபரிக் போன்றவற்றால் வடிவமைக்கப்பட்டதாகும்.
இரு மாடல்களுக்கும் விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவில் விற்பனைக்கு கிடைக்கும்.
மோட்டோ இசட் , மோட்டோ இசட் ஃபோர்ஸ் மற்றும் மோட்டோ மாட்ஸ் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here