ரூ.5999 விலையில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மோட்டோ சி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட்போனாக மோட்டோ C விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

மோட்டோ சி மொபைல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

மோட்டோ சி மொபைல்

இந்தியாவில் பட்ஜெட் ரக பிரிவான ரூ. 5500 முதல் ரூ.9999 வரையிலான சந்தையில் மிக கடுமையான போட்டியை சந்தித்து வருகின்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு சவாலாக மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ பிராண்டில் மோட்டோ C ஸ்மார்ட்போன் களமிறக்கப்பட்டுள்ளது. முற்கட்டமாக 100 முன்னணி நகரங்களில் ஆஃப்லைன் வாயிலாக விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மோட்டோ சி மாடலில் 4ஜி வோல்ட்இ ஆதரவு பெற்ற மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ C ப்ளஸ் மற்றும் மோட்டோ சி 3ஜி மாடல்கள் பற்றி எந்த விபரத்தையும் வழங்கவில்லை.

டிசைன் மற்றும் டிஸ்பிளே

வழக்கமான மோட்டோ மொபைல்களுக்கு உரித்தான அடிப்படை டிசைன் அம்சங்களை பெற்றதாக வந்துள்ள மோட்டோ சி கருவியில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் கிடைக்க உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5 இன்ச் FWVGA திரையுடன் 480×854 பிக்சல் தீர்மானத்தை பெற்றதாக வந்துள்ளது. இந்த கருவியின் அளவுகள் 145.5 x 73.6 mm x 9 mm மற்றும் 154 கிராம் எடை கொண்டதாகும்.

பிராசஸர் மற்றும் ரேம்

ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற மோட்டோ C மாடலில் 1.1 GHz குவாட் கோர் பிராசஸருடன் மீடியாடெக் MT6737M பிராசஸர் பெற்று 1GB ரேம் உடன் 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்று கூடுதலாக நினைவகத்தை நீட்டிக்க 32ஜிபி மைக்ரோஎஸ்டி ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது.

மோட்டோ சி மொபைல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

கேமரா

720p தீர்மான வீடியோவை பதிவு செய்யும் வகையிலான 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் போன்ற விருப்பங்களை பெற்ற கேமரா பின்பகுதியிலும், செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு எல்இடி ஃபிளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.

பேட்டரி

நீக்கும் வகையிலான அமைப்பை பெற்ற 2350mAh பேட்டரியால் இயக்கப்படுகின்ற கருவியாக அமைந்துள்ளது.

மற்ற விருப்பங்கள்

இரட்டை சிம் கார்டு, 4G LTE மற்றும் VoLTE உடன் வை-ஃபை 802.11 b/g/n, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், மற்றும் யூஎஸ்பி போன்றவற்றை பெற்றுள்ளது.

மோட்டோ சி மொபைல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

போட்டியாளர்கள்

மோட்டோ சி ஸ்மார்ட்போன் ரெட்மி 4ஏ மொபைலுக்கு மிகுந்த சவாலாக அமைந்துள்ளது.

மோட்டோ C விலை விபரம்

ரூ.5,999 விலையில் வெளியிடப்பட்டுள்ள மோட்டோ C தற்பொழுது 100 க்கு மேற்பட்ட முன்னணி நகரங்களின் உள்ள ரீடெயிலர்கள் வாயிலாக விற்பனைக்கு கிடைக்கின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here