மோட்ரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி4 ஸ்மார்ட்போன் ரூ.12,499 விலையில்  அமேசான் தளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

விற்பனையில் உள்ள ஜி4 ப்ளஸ்  மாடலின் தோற்ற அமைப்பிலே விளங்கும் மோட்டோ ஜி4 மொபைலும் மெட்டல் பாடியை பெற்றுள்ளது. மிகவும் தட்டையான மொபைலாக நேர்த்தியாக அமைந்துள்ள மோட்டோ G4 மொபைலில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி (1080p) திரையை பெற்று கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினை பெற்றுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 617 ஆக்டோ பிராசஸருடன் இணைந்த 2GB ரேம் பெற்று 16GB உட்புற சேமிப்பு திறனை பெற்றுள்ள ஜி4 மொபைலில் கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு ஆப்ஷன் வழியாக 128GB வரை சேமிப்பு திறனை பெறலாம்.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தில் செயல்படும் மோட்டோ G4 ஸ்போர்ட்ஸ் பிரைமரி கேமரா 13MP பெற்று சிறப்பான படத்தினை வழங்குகின்றது முன்பக்க கேமரா 5MP பெற்றுள்ளது. 4ஜி LTE மற்றும் 4G VoLTE போன்ற அம்சங்களுடன் 3000mAh பேட்டரி திறனை பெற்றுள்ளது.

மோட்டோ ஜி4 ப்ளஸ் மாடலை போலவே அமைந்திருந்தாலும் ஜி4 விலை குறைவாக சவாலாக உள்ளது. ஜி4 ப்ளஸ்  16 ஜிபி விலை ரூ. 13,499 மற்றும் ஜி4 ப்ளஸ் 32ஜிபி விலை ரூ. 14,999 ஆகும்.

 அமேசான் தளத்தில் வாங்க ;