மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ பிராண்டில்  E4 மற்றும் E4 ப்ளஸ் மாடல்கள் ரூ. 8,999 மற்றும் 9,999 ஆகிய விலைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ E4 மற்றும் E4 ப்ளஸ் விற்பனைக்கு வந்தது

மோட்டோ E4 மற்றும் E4 ப்ளஸ்

இந்திய சந்தையில் அதிகரித்து வருகின்ற பட்ஜெட் ரக மொபைல்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் மோட்டோ பிராண்டில்  இ4 மற்றும் இ4 ப்ளஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இ4 ஸ்மார்ட்போன் ரூ.8,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் E4 பிளஸ் ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

மோட்டோ இ4 ஸ்மார்ட்போனில் 5 அங்குல திரை 720 x 1280 பிக்சல் தீர்மானத்தை பெற்றதாகவும், மோட்டோ இ4 பிளஸ் மொபைலில் 5.5 அங்குல திரை 1280×720 பிக்சல் தீர்மானத்தை பெற்றுள்ளது. 2.5டி கிளாஸ் வளைந்த பாதுகாப்பு கண்ணாடியை கொண்டதாக வந்துள்ளது.

பிராசஸர் & ரேம்

இரு ஸ்மார்ட்போன்களிலும் மீடியாடெக் குவாட்-கோர் MT6737M SoC பிராசஸருடன் கூடிய 2GB ரேம்  (இ4) 16ஜிபி மெமரி மற்றும் 3GB  ரேம் (இ4 ப்ளஸ்) 32ஜிபி மெமரி ஆப்ஷன் பெற்றிருப்பதுடன் கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக சேமிப்பை 128ஜிபி வரை அதிகரிக்கலாம்.

கேமரா

இ4 பிளஸ் மொபைலின் கேமரா பிரிவில் எல்இடி ப்ளாஷ், எஃப் / 2.0 கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமராவும், மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எல்இடி ப்ளாஷ், எப் / 2.2 துளை கொண்ட மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

மோட்டோ E4 மற்றும் E4 ப்ளஸ் விற்பனைக்கு வந்தது

இ4 மொபைலின் கேமரா பிரிவில் எல்இடி ப்ளாஷ், எஃப் / 2.0 கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும், மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எல்இடி ப்ளாஷ், எப் / 2.2 துளை கொண்ட மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி

E4 பிளஸ் கருவியில் 5000mAh திறன் பெற்ற பேட்டரியுடன் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்தை கொண்டதாக உள்ளது.

E4 கருவியில் 2800mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டதாக உள்ளது.

மற்றவை

ஆண்ட்ராய்டு நௌகட் தளத்தில் செயல்படுகின்ற இருமொபைல்களிலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவற்றை கொண்டதாக உள்ளது..

மோட்டோ E4 மற்றும் E4 ப்ளஸ் விற்பனைக்கு வந்தது

விலை

ரூ. 8,999 விலையில் மோட்டோ இ4 விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் ரூ.9,999 விலையில் மோட்டோ இ4 பிளஸ் ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here