இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ Z2 ப்ளே ஸ்மார்ட்போன் 27 ஆயிரத்து 299 ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. வருகின்ற ஜூன் 15 முதல் ஃப்ளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

மோட்டோ Z2 ப்ளே ஸ்மார்ட்போன் விலை ரூ. 27,999

மோட்டோ Z2 ப்ளே ஸ்மார்ட்போன்

வருகின்ற ஜூன் 15 முதல் ஃப்ளிப்கார்ட மற்றும் ரீடெயில்கள்  வழியாக விற்பனைக்கு கிடைக்க உள்ள மோட்டோ இசட்2 பிளே மொபைலை பற்றி முழுமையாக இங்கே அறிந்து கொள்ளலாம். கடந்த வாரம் சர்வதேச வெளியான நிலையில் மோட்டோ மாட்ஸ் இந்தியா வருகை குறித்தான விபரங்கள் வழங்கப்படவில்லை.

மோட்டோ Z2 ப்ளே ஸ்மார்ட்போன் விலை ரூ. 27,999

டிசைன் மற்றும் டிஸ்பிளே

முந்தைய மோட்டோ இசட் மாடலை விட மிக மெல்லியதாக மற்றும் ஸ்டைலிசாக உருவாக்கபட்டுள்ள மோட்டோ இசட்2  ஸ்மார்ட்போன் 5.5 இஞ்ச் முழு ஹெச்டி திரையுடன் 1080×1920 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக வந்திருப்பதுடன் சூப்பர் AMOLED பெற்று கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினை கொண்டதாக வந்துள்ளது.

பிராசஸர் மற்றும் ரேம்

ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தால் செயல்படுகின்ற மோட்டோ Z2 பிளே ஸ்மார்ட்போனில் 2.2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் பெற்றிருப்பதுடன் 64ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பு வழங்கப்பட்டு கூடுதலாக சேமிப்பை நீட்டிக்க மைக்ரோஎஸ்டி அட்டையை 2டிபி வரை பயன்படுத்தலாம்.

கேமரா

1.4 மைக்ரான் பிக்சல் சென்சார், f/1.7 அப்ரேச்சர், சிசிடி (colour correlated temperature -CCT), இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ், இரட்டை ஆட்டோ ஃபோகஸ் மற்றும் லேசர் போன்றவற்றை பெற்ற 12 மெகாபிக்சல் கேமரா பிரைமரியாக வழங்கப்பட்டுள்ளது.

f/2.2 அப்ரேச்சர், வைட் ஏங்கிள் லென்ஸ், மற்றும் இரட்டை டோன் எல்இடி CCT ஃபிளாஷ் போன்றவற்றை கொண்ட 5 மெகாபிக்சல் செல்ஃபீ மற்றும் வீடியோ படங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

முந்தைய மோட்டோ இசட் மாடலை விட சுமார் 510mAh குறைக்கப்பட்ட 3000mAh பேட்டரியால் மோட்டோ இசட் 2 பிளே இயக்கப்படுகின்றது. மிக வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான டர்போசார்ஜ் பவர் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளதால் 30 நிமிடங்களில் 50 சதவிகித சார்ஜினை பெற்று விடும்.

மற்ற விருப்பங்கள்

4G VoLTE, வை-பை 802.11 a/g/b/n (2.4GHz and 5GHz), புளூடூத் 4.2, யூஎஸ்பி Type-C (3.1), a 3.5mm ஜாக், NFC, எஃப்எம் ரேடியோ மற்றும் GPS/ A-GPS போன்றவற்றுடன் ஆக்சிலோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஜியோர்ஸ்கோப், மேக்னடோமீட்டர்  போன்றவை இடம்பெற்றுள்ளது.

மோட்டோ Z2 ப்ளே ஸ்மார்ட்போன் விலை ரூ. 27,999

சிறப்பு சலுகைகள்

தற்போது முன்பதிவு செய்யும் வாடிக்கயாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வாயிலாக 100ஜிபி இலவச கூடுதல் டேட்டா போன்றவற்றுடன் மோட்டோ ஆர்மர் பேக் என்ற பெயரில் அலுமினிய கேஸ் ,பேக் ஷெல் ,செல்ஃபீ ஸ்டிக் மற்றும் புராடெக்டிவ் ஃபீலிம் போன்றவைக்கு சிறப்பு சலுகை கிடைக்கும்.

விலை

வருகின்ற ஜூன் 15 முதல் ஃப்ளிப்கார்ட மற்றும் ரீடெயில்கள்  வழியாக விற்பனைக்கு கிடைக்க உள்ள மோட்டோ இசட்2 பிளே விலை ரூ.27,999 மட்டுமே..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here