யு யூரேகா பிளாக் ஸ்மார்ட்போன் ஜூன் 1ல் அறிமுகம்

வருகின்ற ஜூன்1ந் தேதி மைக்ரோமேக்ஸ் யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் புதிய யு யூரேகா பிளாக் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

யூரேகா ஸ்மார்ட்போன்

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த யூரேகா பிராண்டின் பெயரில் மீண்டும் புதிய பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட புதிய யு யூரோகா பிளாக் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த வருடத்தின் இறுதியில் யூ பிராண்டு மொபைல்களின் விற்பனையை நிறுத்தப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் புதுப்பிக்கப்பட்ட நிறுவனமாக யூ மொபைல் பிராண்டில் முதல் புதிய மாடலாக யூரேகா பிளாக் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருப்ப நிறத்தில் வரவுள்ளதை தொடர்ந்து இதன் பட்ஜெட் மற்றும் நுட்ப விபரங்கள் குறித்து எவ்விதமான தகவலும் வெளியிடப்படவில்லை. ஜூன் 1ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள யுரேகா மிக சவலான பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்களை பெற்றதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You