ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனையின் lyf பிராண்டில் ஃபிளேம் 6 4G மொபைல் வெறும் ரூ.3,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளேம் 3 மற்றும் ஃபிளேம் 4 மொபைல்களை தொடர்ந்து  ஃபிளேம் 6 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் விற்பனை அல்லாமல் நேரடியாக விற்பனை கடைகளில் கிடைக்கும் வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லைஃப் பிராண்டின் ஃபிளேம் வரிசையில் வந்துள்ள ஃபிளேம் 6 மொபைலில் 4 இஞ்ச் தொடுதிரை அசெய் ட்ராகென்டெயில் கிளாஸ் பெற்றுள்ளது.

1.5GHz குவோட்-கோர் Soc புராஸெசர் கொண்டு இயங்கும் மொபைலில் ஃபிளேம் 6 யில் 512 MB ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2 மெகாபிக்ஸல் முன் மற்றும் பின் கேமராக்களை பெற்றுள்ளது. 4GB இன்ட்ரனல் மெம்ரியுடன் 32GB வரையில் நினைவகத்தினை மைக்ரோஎஸ்டி கார்டு கொண்டு விரிவுப்படுத்திக் கொள்ள இயலும்.

5.1 ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் இயங்கும் மொபைலில் டியூவல் சிம் கார்டு (சாதரன சிம் மற்றும் மைக்ரோ சிம் ) பெற்றுள்ளது. இதில் ஒரு சமயத்தில் ஒரே 4G இணைப்பினை மட்டுமே ஏற்படுத்த இயலும்.  4G , வை-ஃபை , பூளூடூத்v4.0 , GPS , மைக்ரோ யூஎஸ்பி போன்றவற்றுடன் VoLTE ஹெச்டி தொடர்பினை பெற இயலும் என்பது மிக சிறப்பான வசதியாகும். இந்தியாவின் அனைத்து 4G நெட்வொர்க்கிலும் இயங்கும்.