லீ ஈகோ நிறுவனத்தின் புதிய மாடல்களான லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 மொபைல்கள் சில தினங்களுக்கு முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லீமால் இந்தியா இணையதள பிரிவின் வாயிலாகவும் ஃபிளிப்கார்ட் தளத்தின் வாயிலாகவும் எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்பட உள்ள லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 மொபைல்களில் அறிமுக சலுகையாக லீ ஈகோ லீ 2 மொபைல் ரூ.1 விலையில்  ரூ.11,999 மதிப்புமிக்க ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட உள்ளது.
லீ 2 ஸ்மார்ட்போன் விபரங்கள்
லீ 2 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளேவுடன் (1920 x 1080 pixels) ஐபிஎஸ் கிளாசினை பெற்றுள்ளது. இதில் ஆக்டோ கோர் ஸ்னாப்டிரகன் 652 பிராசஸருடன் இணைந்த அட்ரெனோ 510 GPU சேர்ந்து 3GB LPDDR3 ரேமில் இயங்குகின்றது. 32GB இன்ட்ரனல் மெம்மரி வசதியை பெற்றுள்ளது. 

இந்தியாவில் அனைத்து 4G LTE அலைவரிசையிலும் இயங்கும் மேலும் 16 மெகாபிக்ஸல் ரியர் கேமரா சிறப்பான படத்தினை வழங்கும் வகையில் டியூவல் எல்இடி ஃபிளாஷ் ,  f/2.0 aperture மற்றும் PDAF (phase detection autofocus) போன்றவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்ஸல் கேமராவினை பெற்றிருக்கும். 3000mAh பேட்டரியுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெறலாம்

டால்பி ஆட்ம்ஸ் சிஸ்டம் , ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் , இன்ஃபிராரெட் சென்சார் போன்வற்றை பெற்றுள்ளது.

லீ ஈகோ லீ 2 விலை LeEco Le 2 – Rs.11,999 
லீ ஈக்கோ மொபைல் வாங்க ; லீ ஈகோ மொபைல்
லீ 2 மொபைல் ரூ.1க்கு வாங்க

வருகின்ற ஜூன் 15ந் தேதி பகல் 12PM மணிக்கு விற்பனையை தொடங்க உள்ள மொபைலை முதலில் வாங்கும் 200 நபர்களுக்கு ரூ.1 விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீ 2 ரூ.1 வாங்க லிங்க் ;  lemall