ரூ.10,999 விலையில் டிசிஎல் 562 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

ரூ.10,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிசிஎல் 562 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்றவை உள்ளது. அமேசான் வழியாக ஆகஸ்ட் 3 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

டிசிஎல் 562 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் முழுமையான ஹெச்டி (1920 X 1080 pixels) ஐபிஎஸ் லேமினேஷன் திரையுடன் , ஆக்டோ கோர் ஹீலியோ பி10 Soc பிராசஸருடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இன்ஃபனைட் UI தளத்தில் இயங்கூடிய 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்ட்ரனல் மெம்மரி பெற்றுள்ளது. 64ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டினை இனைத்துக்கொள்ளலாம்.

13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் கேமரா உடன் இணைந்த டியூவல் எல்இடி பிளாஷ் மற்றும் பிடிஏஎஃப் போன்றவற்றை பெற்றுள்ளது. 5 மெகாபிக்சல் கேமரா எல்இடி பிளாஷ் இடம்பெற்றிருக்கும்.  2960mAh பேட்டரியுடன் நாள் முழுமைக்கு தாங்கும் வகையில் அமைந்துள்ளது. பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கின்றது.

4ஜி எல்டிஇ, வை-ஃபை, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், மைக்ரோயூஎஸ்பி 2.0  மற்றும் கைரேகை ஸ்கேனர் முன்பக்க ஹோம் பட்டனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிசிஎல் 562 ஸ்மார்ட்போன் ரூ.10,999 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3 முதல் எக்ஸ்குளூசிவாக  அமேசான் தளத்தில் கிடைக்கும்.

Recommended For You